7 நாள் 7 விதமான காபி குடியுங்கள் அதிசயத்தை நீங்களே பாருங்க

Loading...

சில ஆரோக்கியமான சுவை மிகுந்த காபி வகைகளை நம் வீட்டிலே மிகவும் எளிய முறையில் தயாரித்து குடித்து, அதனுடைய அற்புதமான நன்மைகளையும் பெறலாம். அதுவும் வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு விதமான சுவை மிகுந்த காபி.

கருப்பட்டி காபி

முதலில் 1/4 கப் கருப்பட்டியைக் கரைத்து வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு இறக்கி, அதில் கரைத்து வடிகட்டிய கருப்பட்டியை சேர்த்தால், சுவையான கருப்பட்டி காபி தயார்.

நன்மைகள்

இந்த கருப்பட்டி காபியில் சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எலும்புகள் மற்றும் பற்களின் உறுதியை மேம்படுத்தலாம்.

தாமரைப்பூ காபி

2 டம்ளர் நீரில் காம்பு நீக்கிய தாமரைப்பூவை போட்டு கொதிக்க வைக்கும் போது, கிராம்பு பொடி, மிளகு, ஏலக்காய் சேர்த்து வடிகட்டி, அதனுடன் பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்தால், சுவையான தாமரைப்பூ காபி தயார்.

நன்மைகள்

இந்த தாமரைப்பூ காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அமினோஅமிலங்கள், பாலிஃபினால், கிளைக்கோசைட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளதால், இது புற்றுநோய் வராமல் தடுத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

செம்பருத்திப்பூ காபி

செம்பருத்திப்பூவின் காம்பு, மகரந்தத் தண்டை நீக்கிவிட்டு, 1 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை பொடித்து, அதனுடன் கலந்து, கொதித்த பின் வடிகட்டி அதில் பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்தால், சுவையான செம்பருத்திப்பூ காபி தயார்.

நன்மைகள்

இந்த செம்பருத்திப்பூ காபியில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலம் போன்றவை உள்ளது. எனவே இது ரத்தத்தைச் சுத்தமாக்கி, செரிமானத்தை மேம்படுத்தி, கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயம் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

சுக்கு காபி

சுக்கு, ஏலக்காய் ஆகிய இரண்டையும் சேர்த்து பொடித்து, பின் அதை ஒரு டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் பால் மற்றும் சர்க்கரை கலந்தால், சுவையான சுக்கு காபி தயார்.

நன்மைகள்

இந்த சுக்கு காபியில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, பீட்டாகரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவை உள்ளது. எனவே இது செரிமானத்தை சீராக்கி, சளி, கபம் பிரச்சனைகளை குணமாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பேரீச்சம் விதை காபி

பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்து, அதை 1 டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டி, அதனுடன் பால் மற்றும் பனங்கற்கண்டு கலந்தால், சுவையான பேரீச்சம் விதை காபி தயார்.

நன்மைகள்

பேரீச்சம் விதையில் தாமிரம், செலீனியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக உள்ளதால், இது ரத்தசோகையை பிரச்சனையை போக்கி, ரத்த உற்பத்தி மற்றும் தாது உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை பாதுகாத்து, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

முருங்கைப்பூ காபி

முருங்கைப் பூவைச் சுத்தமாக்கி, அதை உலர்த்திப் பொடி செய்து, பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் இந்தப் பொடிய மற்றும் பனங்கற்கண்டை சேர்த்து கலக்கினால், சுவையான முருங்கைப்பூ காபி தயார்.

நன்மைகள்

முருங்கை பூவில் விட்டமின் A, B6, B9, கால்சியம், இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளது. எனவே இது உடல் மற்றும் எலும்பை வலிவாக்கி, ரத்தசோகை பிரச்சனையை போக்கி, ஆண்மை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.

ஏலக்காய் காபி

நீர், காபித்தூள் மற்றும் சர்க்கரை ஆகிய அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து பேஸ்டாக்கி, பின் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை மற்றும் தண்ணீரையும் சேர்த்து, ஏலக்காயை போட்டு நன்கு கொதிக்க வைத்து, சிறிது காபி பொடி தூவினால், சுவையான ஏலக்காய் காபி தயார்.

நன்மைகள்

ஏலக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், விட்டமின் C ஆகியவை நிறைந்துள்ளது. எனவே இது ஜீரணக் கோளாறுகள், அசிடிட்டி, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்க உதவுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply