வெண்ணெய் சாப்பிட்டால் ஆபத்தா

Loading...

வரையறுக்கப்பட்ட அளவில் வெண்ணெய் உணவுகளை உட்கொள்வதால் இதய நோய்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என புதிய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

அதேநேரம் இவ் உணவுகள் நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தக் கூடும் எனவும் நம்பப்படுகிறது.

இவ் ஆய்வில் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் சிறிதளவு வெண்ணெய் உணவுகளால் எந்தவொரு மாற்றமும் காணப்படாதமை அவதானிக்கப்பட்டது.

வெண்ணெய்யானது சீனி மற்றும் மாப்பொருள் செறிவான உணவுகளிலும் பார்க்க ஆரோக்கியமான உணவாக பார்க்கப்பட்டது.

ஆனாலும் இவ் வெண்ணெய்யானது ஆரோக்கியமற்ற உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளும் போது அது இதய மற்றும் நிரிழிவு நோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது என சொல்லப்படுகிறது.

மேற்படி பரிசோதனை 15 நாடுகளைச் சேர்ந்த 6.5 மில்லியன் பேர்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply