வாழைப்பழத் தோலை சாப்பிடலாமா என்ன நடக்கும்

Loading...

வாழைப்பழத்தை போன்றே அதன் தோலிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.

வாழைப்பழத்தின் தோலில் விட்டமின் A, B6, B12, C, நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.

வாழைப்பழ தோலினால் கிடைக்கும் நன்மைகள்

வாழைப்பழ தோலில் விட்டமின் A அதிகம் உள்ளதால், அது எலும்பு, பற்கள் மற்றும் திசுக்களின் வலுவை அதிகரிக்கும். வாழைப்பழ தோலை பற்களில் தேய்த்து வந்தால், பற்களின் மஞ்சள் கறைகளை எளிதில் நீக்கலாம்.
வாழைப்பழ தோலில் உள்ள விட்டமின் B6, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
வாழைப்பழத்தின் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் விட்டமின் சத்துக்கள், நரம்பு மண்டலத்தை பாதுகாத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சருமத்தை மிருதுவாக்கி, உடலில் உள்ள புதிய திசுக்கள் மற்றும் தசை நார்களின் வளர்ச்சியை அதிகரிக்க, வாழைப்பழ தோலில் உள்ள விட்டமின் C மற்றும் நார்ச்சத்துக்கள் உதவுகிறது.
வாழைப்பழ தோலானது செரோடோனின் ஹார்மோனை ஊக்குவிப்பதுடன், இது உடலில் உள்ள கொழுப்புக்களை குறைத்து, மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
அலர்ஜி மற்றும் தடிப்பு பிரச்சனை உள்ளவர்கள், வாழைப்பழ தோலை பிரிட்ஜில் வைத்து, பின் அதனை தடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால், தடிப்பு மற்றும் அரிப்புகள் உடனே குறைந்துவிடும்.
வாழைப்பழத்தின் தோலானது, கூர்மையான கண்பார்வை மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நல்ல உறக்கம் ஏற்படவும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
காலில் முள் குத்திவிட்டால், அந்த இடத்தை சுற்றி வாழைப்பழ தோல் மூலம் மெல்ல தடவி, கைகளினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் எளிமையாக உள்ளே இருக்கும் முள்ளை எடுத்து விடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply