யோகாவின் போது செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

Loading...

யோகாவின் மூலம் உடல் மட்டுமல்ல மனமும் ஆரோக்கியமடையும்.

இன்று பெரும்பான்மையான மக்கள் யோகாவை விரும்புகின்றனர். ஏன்? இப்போது உள்ள மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும் கூட யோகா துறையில் நுழைகின்றனர்.

மேலும், யோகா தெரபி வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவையும் கொடுக்கின்றனர்.

இவ்வளவு சிறப்புள்ள யோகாசனத்தை செய்யும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அதனால் யோகா பயிற்சியின் அடிப்படை வழிகாட்டுதல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருவர் எப்போதும் யோகாவை அதிகாலையில், குளித்த பிறகு எதையும் சாப்பிடாமல் பயிற்சி செய்ய வேண்டும்.
குளியலுக்கு முன்னும் யோகா செய்யலாம், ஆனால் பின்னர் நீங்கள் சில நேரம் காத்திருந்து தான் குளிக்க வேண்டும்.
யோகாவை காற்றோட்டமான, வெளிச்சமாக உள்ள இடங்களில் செய்வதே சிறந்தது.
யோகாசனத்தை வெறும் தரையில் செய்ய கூடாது. சமன் தரையில் ஒரு போர்வை அல்லது கம்பளி விரித்து தான் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
யோகாசனம் செய்யும் போது கவனத்தை வேறு விடயங்களில் சிதற விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள் யோகாசனத்தை மாதவிலக்கின் போதும், கர்ப்பம் தரித்திருக்கும் போதும் செய்ய கூடாது.
8 வயதிருக்கு குறைவாக உள்ள குழந்தைகளை யோகாசனம் செய்ய வற்புறுத்த வேண்டாம்.
புகை உள்ள இடங்களில் அல்லது துர்நாற்றம் கொண்ட பகுதிகளில் ஒருபோதும் யோகா பயிற்சி மேற்கொள்ளக்கூடாது.
எலும்பு முறிவுகள், சுளுக்கு உள்ள போதும், உடல்நிலை சரியில்லாத போதும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் யோகாசனம் செய்யக்கூடாது. தகுந்த மருத்துவரை கலந்தாலோசித்து பின்பு தொடங்கலாம்.
யோகா பயிற்சி மேற்கொள்ளும் போது தும்மலோ, இருமலோ வந்தால் அடக்க முயற்சிக்க வேண்டாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply