மர சமையல் பாத்திரங்கள் பளிச்சிட சூப்பர் டிப்ஸ்

Loading...

வீட்டில் உள்ள மரத்திலான செய்யப்பட்ட சமையல் பாத்திரங்களை, சமையலறை பொருட்களை வைத்தே பளிச்சிட செய்யலாம் எப்படி தெரியுமா?

மரத்தினால் ஆன பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி?

எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதை கொதிக்கும் நீரில் கலந்து, அந்த நீரில் மரத்தினாலான சமையல் பாத்திரங்களை ஊறவைத்து 15 நிமிடங்கள் கழித்து, காட்டன் துணி மூலம் நன்றாக துடைத்து, வெயிலில் உலர்த்த வேண்டும்.
ஒரு டம்ளர் வினிகரை பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேனை நன்றாக கலந்து, அதில் பஞ்சுருண்டையை நனைத்து பாத்திரங்களை துடைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சுடுநீர் மற்றும் உப்பை போட்டு அதில் மரத்தினால் ஆன பாத்திரங்களை போட்டு, 5 நிமிடங்கள் கழித்து, எடுத்து அதை ஒரு துணியால் நன்கு துடைத்து, வெயிலில் காய வைக்க வேண்டும்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை ஜூஸை கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்து, அதை மர பாத்திரங்களின் மீது தடவி, வெயிலில் 15 நிமிடங்கள் வைத்து பின் வெந்நீரில் கழுவ வேண்டும்.
மரத்தினாலான சமையல் பாத்திரங்களில் உள்ள அழுக்குகளை நீக்க, வெதுவெதுப்பான நீர் வைத்து துடைக்கலாம். ஆனால் இம்முறையை அடிக்கடி பின்பற்ற வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply