பொறாமை கொள்ள வைக்கும் அழகுக்கு அன்னாசியை எப்படி பயன்படுத்தலாம்

Loading...

அழகை மேம்படுத்த அன்னாசி பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் விட்டமின் சி, பொட்டாசியம், ஜிங்க் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

இந்த சத்துக்கள் உங்களது தலைமுடி மற்றும் சருமத்தை அழகாக்க உதவுகிறது. இதன் சாறு சருமம் பொலிவிற்கும், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

பொலிவான சருமம்:

அன்னாசி பழத்தில் உள்ள விட்டமின் சி சருமத்தை பொலிவாக்குகிறது.

செய்முறை: அன்னாசி பழத்தை துண்டுகளாக நறுக்கி ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் பொலிவான சருமம் கிடைக்கும்

இறந்த செல்களை அகற்ற:

அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமம் பொலிவாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.

செய்முறை: அன்னாசி பழச்சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பிரவுன் சுகர் இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் ஆரோக்கியமான அழகான சருமம் கிடைக்கும்.

கருமையை போக்க:

தினமும் அன்னாசி பழத்தை பயன்படுத்தினால் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமம் சரியாகும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள கருமையை போக்கிடும்.

செய்முறை: 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் அன்னாசி பழச்சாற்றை கலந்து சருமத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் கருமை நீங்கி சருமம் அழகு பெறும்.

வெடிப்புற்ற உதடு:

அன்னாசி பழச்சாறு வறண்ட மற்றும் வெடிப்புற்ற உதட்டிற்கு சிறந்தது. கொஞ்சம் அன்னாசி பழச்சாற்றை எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து 10 நிமிடங்கள் உதட்டில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ஈரப்பதமான மிருதுவான உதடு கிடைக்கும். மேலும் இது உதட்டில் உள்ள கருமை யையும் போக்கிடும்.

முகப் பருக்கள் போக்க:

அன்னாசி பழத்தில் உள்ள விட்டமின் சி சருமத்தில் உள்ள பருக்களை அகற்றுகிறது. எந்த வித எரிச்சலும் இல்லாமல் முகப்பருக்களை குணப்படுத்துகிறது.

செய்முறை: இரவில் அன்னாசி பழச்சாற்றை பருக்களில் தடவி விட்டு விடுங்கள். காலையில் எழுந்ததும் நீரில் கழுவவும். தினமும் இதை செய்தால் பருக்களற்ற அழகான முகம் கிடைக்கும்.

பொலிவான கூந்தலுக்கு:

அன்னாசி பழத்தில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உங்கள் முடியின் வளர்ச்சிக்கு உதவும்.

செய்முறை: சிறிது அன்னாசி பழச்சாற்றை தலையில் தடவி நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் பொலிவான மற்றும் மிருதுவான கூந்தல் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply