புரோட்டா பிரியரா ஜாக்கிரதை

Loading...

புரோட்டாவில் கொத்து, வீச்சு, சில்லி, ஆலு, கைமா, நெய், முட்டை போன்ற பல வகைகள் உள்ளது.

இந்த புரோட்டாக்களை சாப்பிடுவதால் பலவகையான நோய்கள் வருவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

புரோட்டா சாப்பிடுவது ஆபத்து ஏன்?

பொதுவாகவே நார்ச்சத்து இல்லாத எந்தவொரு உணவுப் பொருட்களுமே நம் உடம்பின் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.

ஏனெனில் உணவில் உள்ள நார்ச்சத்துக்கள் தான் சரியான நேரத்தில் செரிமானம் அடையச் செய்வதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

அந்த வகையில், கோதுமையில் உள்ள நார்ச்சத்து முழுவதையும் பிரித்து எடுத்த பின் கிடைக்கும் மைதா மாவில் தயாரிக்கப்படும் புரோட்டாவை அடிக்கடி சாப்பிடக் கூடாது.

ஏனெனில் மையாக அரைக்கப்பட்ட கோதுமையில் இருந்து மீதமாகும் பழுப்பு கலந்த மஞ்சள் நிறமுள்ள மாவுடன், பென்சாயில் பெராக்ஸைடு மற்றும் அலெக்ஸான் எனும் இரண்டு வகை வேதிப்பொருட்களை சேர்ப்பதால், மைதா மாவு பளிச்சென்று வெள்ளையாகவும், மிருதுவாகவும் மாறுகிறது.

மைதா மாவில் கலந்துள்ள இந்த இரண்டு வேதிப்பொருட்களுமே நேரடியாக சர்க்கரை நோயை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.

எனவே மாவிலுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து இதை எடுத்துக் கொள்ளும் போது, உடலில் இன்சுலின் சுரப்பு பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் மைதா மாவில் தயாரித்த புரோட்டாவில் ஆயில் மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால், அது உடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply