பீட்ரூட் சாறு குடியுங்கள் ரத்த அழுத்தத்தை குறையுங்கள்

Loading...

பீட்ரூட் காய், கீரை, ஜூஸ் என பீட்ரூட்டின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை.
பீட்ரூட்என்ற ஒற்றை உணவுப்பொருள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்லது ஆகும்.
பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன்கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள்உற்பத்தியாகும்.
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது.
இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்த அழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது.
அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.
மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொரு விதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.
இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில்அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது.
எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது,அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply