நகத்தில் படியும் கறைகளை அகற்ற சூப்பர் வழி

Loading...

ஆரோக்கியமான நகம் தான் நம் உடல் நலம் மற்றும் ஆயுளையும் பிரதிபலிக்கச் செய்கிறது. எனவே நகத்தின் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது.

அந்த வகையில், நகத்தின் அழுக்குகளை நீக்கி, பொலிவாக மாற்ற இயற்கை வழிகள் நிறைய உள்ளது.

நகத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி?

நகங்களில் உள்ள அழுக்குகளை அகற்றி, பாலிஷ் செய்து, நகத்தின் மேல், கீழ் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் டூத் பேஸ்ட்டை நன்கு தடவி, சிறிய டூத் பிரஷ் கொண்டு நன்றாக ஸ்க்ரப் செய்து நீரில் நன்றாக கழுவ வேண்டும்.
நகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி, பேக்கிங் சோடா, சுடுநீர் கலந்த பேஸ்ட்டை நகத்தின் மேல் மற்றும் பக்கவாட்டு பகுதியில் தடவி 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
காட்டன் பஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து நகங்களின் அனைத்து பகுதிகளிலும் தடவி, சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவினால், நகங்கள் மணமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
எலுமிச்சை ஆயில் மற்றும் டீ-ட்ரீ ஆயிலை சிறிதளவு சுடு நீரில் நன்றாக கலந்து அதில் நகங்களை நனைத்து, சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இதனால் நகத்தில் உள்ள கறைகள், பூஞ்சை தொற்றுக்களை நீக்கி, பொலிவாக மாற்றலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply