கழுத்துவலியை போக்க தலையணை வைத்துப் படுக்கலாமா

Loading...

சுகமான நல்ல உறக்கம் வேண்டுமெனில், அதற்கு படுக்கை மற்றும் தலையணையை சரியாக அமைக்க வேண்டும்.

ஏனெனில் கழுத்து எலும்புகள் மற்றும் நரம்புகளின் வளைவுகளை சரியான உயரம் மற்றும் கோணத்தில் தாங்கும் வகையில் தலையணை இருந்தால், மட்டுமே நிம்மதியான உறக்கம் ஏற்படும்.

கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை வைக்கலாமா?

கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை வைத்து உறங்குவதை தவிர்ப்பது நல்லது. ஆனால் இதை பின்பற்ற முடியாதவர்கள், சிறிய தலையணையைக் கழுத்துக்கு வைத்துக் கொள்வதோடு, தோள்களுக்கும் சேர்த்து வைத்துக் கொண்டால், கழுத்துவலி குறைய வாய்ப்புள்ளது.

மருத்துவரின் ஆலோசனையின் படி, செர்விகல் தலையணை(Cervical pillow) எனும் பெயரில் உள்ள சிறப்புத் தலையணையை வைத்துக் கொள்ளலாம்.

கழுத்துவலி உள்ளவர்கள் குப்புறப்படுக்கக் கூடாது. ஏனெனில் அது கழுத்துத் தசைகளின் அழுத்தம் அதிகரித்து, கழுத்துவலி பிரச்சனையை அதிகமாக்கிவிடும்.

கழுத்து வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், காற்றடைத்த தலையணையை (Air pillows) கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.

கழுத்துவலி மற்றும் முதுகுவலியும் பிரச்சனை உள்ளவர்கள், முழங்காலுக்கு அடியில், சிறிய தலையணை ஒன்றை வைத்துக் கொள்ளலாம்.

தலையணை எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்?

மென்மையான ஒரு துண்டை எடுத்து நான்காக மடித்தால், எவ்வளவு உயரம் வருமோ அவ்வளவு உயரத்தில் தலையணை வைத்தால் போதும்.

அந்த உயரம் போதவில்லை என்றால், சிறிய துண்டு ஒன்றைத் தலையணையின் மேல் விரித்து கொள்ளலாம் அல்லது ஒரு கையை மடக்கித் தலையணையில் வைத்து உறங்கலாம்.

உயரமான, கடினமான அல்லது இரண்டு தலையைணைகளை வைத்து உறங்கினால், அது பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தலையணை வைப்பதால் ஏற்படும் பிரச்சனை என்ன?

தலைக்கு உயரமான தலையணையை பயன்படுத்துவதால், கழுத்துப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு, கழுத்தைத் திருப்ப முடியாமல் அதிக வலி ஏற்படும்.
கழுத்து பகுதியில், இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் முக்கியமான ரத்தக் குழாய் உள்ளது. இது அழுத்தப்பட்டால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டு, உறக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், உயரமான தலையணையை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அது தொண்டை தசைகளில் அழுத்தத்தை உண்டாக்கி, அதனால் குறட்டை, சுவாச பிரச்சனை மற்றும் உறக்கமின்மை ஏற்படும்.

குறிப்பு
ரத்த அழுத்தம் பிரச்சனை, கழுத்து எலும்புகளில் தேய்மானம், வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் பாதிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தலையணை வைத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply