எப்போ குளித்தால் நல்லது எப்போ சாப்பிட்டா நல்லது தெரியுமா

Loading...

பல பேர் குளித்தவுடன் சாப்பிடும் பழக்கம் வைத்திருக்கிறோம். குளித்தவுடனே சாப்பிட்டால் சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது.குளித்தபின் குறைந்த பட்சம் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகுதான் சாப்பிட வேண்டும். அதே போல் சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு தான் குளிக்க வேண்டும்.

நம் உடல் 24 மணி நேரமும் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், செல்களும் 98.4 டிகிரி பாரென்ஹீட் வெப்ப நிலையில் (37 டிகிரி Centigrade) இருக்கும். நாம் குளிர்ச்சியான நாட்டிற்குச் சென்று அங்கே 10 டிகிரி வெப்ப நிலை இருந்தாலும் நம் உடலில் தெர்மா மீட்டர் வைத்து அளந்து பார்த்தால் நம் உடலில் 37 டிகிரி தான் இருக்கும்.

அதே சமயம் சூடான ஒரு நாட்டிற்குச் சென்று அங்கே 50 டிகிரி 60 டிகிரி வெப்பம் இருக்கும்போது நம் உடலில் தெர்மா மீட்டர் வைத்துப் பார்த்தால் நம் உடலில் 37 டிகிரி இருக்கும். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் மனித உடலின் வெப்ப நிலை 37 டிகிரி சென்டிகிரேட் (98.4 டிகிரி பாரென்ஹீட்). உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் இதே வெப்ப நிலைதான்.

ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களுக்கும் ஒவ்வொரு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் ஒவ்வொரு வெப்பநிலை இருக்கும். எனவே தான் சில மிருகங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர்வாழ்கின்றன.

எனவே நாம் குளிக்கும் பொழுது அது சாதாரணத் தண்ணீர் அல்லது சுடு தண்ணீர் எதுவாக இருந்தாலும் அது உடம்புக்கு மட்டும் அல்லது தலைக்கு குளித்தாலும், ஆற்றிலோ, குளத்திலோ, பாத்ரூமிலோ இப்படி எதுவாக இருந்தாலும், குளித்தால் நம் உடலின் வெப்ப நிலை மாறுபடுகிறது.

வெப்பநிலை மாறியவுடன் உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பானது உடனே வேலை செய்து நம் உடலில் மீண்டும் 37 டிகிரி கொண்டு வருவதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கும். குளித்து முடித்தவுடன் ஒரு 45 நிமிடம் காத்திருந்து பிறகு சாப்பிடுங்கள். நீங்களே இதை சோதனை செய்யலாம். குளித்தவுடன் சாப்பிட்டுப் பாருங்கள். அன்று வயிறு கடினமாகவும், அசௌகரியமாகவும் இருக்கும்.

அதே போல் சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே குளிக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிடும் சாப்பாடு குறைந்த பட்சம் ஜீரணமாகி ரத்தமாக மாறுவதற்கு இரண்டரை மணி நேரம் ஆகிறது. சிலருக்கு ஒரு மணி நேரத்திலேயே ஜீரணமாகும். சிலருக்கு ஐந்து மணி நேரமாகும்.

சுமாராக சராசரியாக இரண்டரை மணி நேரமாகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சாப்பிட்டவுடனே அரை மணி நேரத்தில் குளித்தால் உடனே உடலில் உள்ள உடல் வெப்பக்கட்டுப்பாட்டு உறுப்பு உடல் வெப்பத்தைச் சரி செய்ய ஆரம்பிக்கும்.

அப்பொழுது நம் உடலில் உள்ள அனைத்து சக்திகளும் இந்த உடல் வெப்பக்கட்டுப்பாட்டு உறுப்புக்கு மட்டுமே செலவாகுமே தவிர ஜீரணச் சுரப்பிகளுக்குக் கிடைக்காது. இதையும் நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். சாப்பிட்ட உடனே ஒரு நாள் குளித்துப் பாருங்கள்.

அன்று ஜீரணக் கோளாறு ஏற்படும். வயிறு மந்தமாக இருக்கும். தலைவலி வரும். எனவே சாப்பிட்டால் தயவு செய்து இரண்டரை மணி நேரத்திற்கு குளிக்க வேண்டாம். எனவே சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக்கூடாது. குளித்த பிறகு உடனே சாப்பிடக்கூடாது. குறைந்த பட்சம் 45நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

உடலுக்குச் சில விதி முறைகள் உண்டு. எனவே தயவு செய்து எந்தக் காரணத்தையும் கூறாமல் இந்த விதிமுறைகளை நாம் பின்பற்றுவதற்கு நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே யோசியுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply