உடல் உறுப்புகள் இயங்கும் சிறப்பு நேரம்

Loading...

நமது உடலின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது.

இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரலின் நேரம் இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராணசக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேர்த்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது . ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். மூச்சுப்பயிற்சி பழக்கத்தினால் இத்தகு பாதிப்புகள் இன்றி இருக்கலாம்.

விடியற்காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலின் நேரம் காலைக் கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும். மலச்சிக்கல் உடையவர்கள் இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் தொந்தரவே இராது.

காலை 7 மணி முதல் 9 மணி வரை வயிற்றின் நேரம் இந்த நேரத்தில் கல்லைத் திண்றாலும் வயிறு அரைத்து விடும். ஆகவே காலை உணவை பேரரசன் போல்சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகி உடலில் ஓட்டும்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை மண்ணீரல் நேரம். இந்த நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் குடிக்காமல் இருப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள் இந்த நேரத்தில் இது போல் இருப்பதே மிகவும் நல்லது.

முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இதயத்தின் நேரம். இந்த நேரத்தில் அதிகமாக கோபப்படுதல், அதிகமாக «பசுதல், அதிகமாக படபடத்தல் கூடாது. இதய நோயாளிகள் இந்நேரத்தில் நல்ல கவனத்துடன் அமைதியாக இருக்க வேண்டும்.

பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை சிறு குடலின் நேரம். இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவு உண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நீர்கழிவுகளை வெளியேறும் நேரம்.

மாலை 5 மணி முதல் 7 மணி வரை அமைதி பெற, எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7 மணி முதல் 8 மணி வரை இரவு உணவுக்கு உகந்த நேரம்.

இரவு 9 மணி முதல் 11 மணி வரைக்குள் உறங்கச் செல்லும் நேரம்.

இரவு 11 மணி முதல் 1 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் உறங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் விழித்திருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் மறுநாள் சுறுசுறுப்பு இல்லாமல் அவதிப்படுவீர்கள். ஒரு ஆங்கில முறை மருத்துவரால் மேற்கூறப்பட்டவற்றில் அநேகமானவற்றை பயனுள்ளவை என்றே கூறலாம். வழிவழியாய் வந்த நம் நாட்டு மருத்துவமுறையில் பல நன்மைகள் உள்ளன என்பதும் உண்மையே.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply