உடலில் வைட்டமின் டி குறைவதால் என்ன நேரும் தெரியுமா

Loading...

வைட்டமின் டி குறைபாடு என்பது வயதானவர்களுக்கு வருவது இயல்பாகும். தற்போது இளம் வயதினரிடையேயும் இந்த குறைபாடு அதிக அளவில் காணப்படுகின்றது.

வைட்டமின்கள் இரண்டு வகைப்படும். அவை கொழுப்பில் கரைபவை, தண்ணீரில் கரைபவை. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே ஆகும்.

இதேபோல் வைட்டமின்கள் பி1, பி6, பி7, பி12 ஆகியவை தண்ணீரில் கரைபவை. எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாக இருக்க வைட்டமின் “டி” அவசியம். வளர்சிதை மாற்றத்துக்கு இது மிகவும் முக்கியம்.

போதுமான சூரிய ஒளி பட்டால் உடலில் கொலஸ்ட்ராலில் இருந்து வைட்டமின் டி கிடைக்கும். வைட்டமின் டி குறைபாடு என்பது வயதானவர்களுக்கு வருவது இயல்பாகும். தற்போது இளம் வயதினரிடையேயும் இந்த குறைபாடு அதிக அளவில் காணப்படுகின்றது.

ஒவ்வொருவருக்கும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் சுமார் 45 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுவது அவசியமாகும். இதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும்.

1. சிறுவர்கள் தற்போது திறந்த வெளியில் விளையாடுவது கிடையாது.

2. சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரின் லோஷனை பயன்படுத்துகிறோம்.

3. பணி முடிந்தபின்னர் வீட்டிற்கு நடந்து வருவதை தவிர்க்கிறோம்.

குறைபாடு அறிகுறிகள்:

மனஅழுத்தம்
உடல் பருமன் முதுகுவலி
மூச்சிரைப்பு
உயர் ரத்த அழுத்தம்
முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வைட்டமின் டி உணவு பொருட்கள்:

மீன் வகைகள்
இறைச்சி
பால் மற்றும் பால் பொருட்கள்
தானிய வகைகள்.
முட்டையின் மஞ்சள் கரு போன்றவை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply