இந்த ஜூஸை குடித்தால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா

Loading...

அன்றாட உணவில் நாம் தினமும் சேர்த்து சாப்பிட்டு வரக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது உண்மை தான்.

ஆனால் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், பழங்களை விட காய்கறிகள் தான் பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அந்த வகையில் பட்டாணி, எலுமிச்சை, புதினா மற்றும் பூண்டு போன்ற காய்கறிகள் கலந்த ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பட்டாணி – 100 கிராம்
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 6 பற்கள்
செய்முறை

பட்டாணி, எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக ஜூஸ் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் மீது சில புதினா இலைகளை தூவினால் ஆரோக்கியமான சுவையான காய்கறி ஜூஸ் தயார்.

இந்த ஜூஸில் விட்டமின் A, B, B3, B8, B9, C, E மற்றும் J போன்ற அனைத்து சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

காய்கறி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இதயம், கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஸ்ட்ரோக் பிரச்சனையை தடுத்து, மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கிறது.
சளி தொல்லைகள் ஏற்படாமல் தடுத்து, கட்டிகள் உண்டாகுவதை, இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எதிர்த்து போராடுகிறது.
நமது ரத்த அழுத்தத்தை சீராக்கி, செரிமானத்தை ஊக்குவித்து, சருமம் மற்றும் கூந்தல் நலனை அதிகரிக்க செய்கிறது.
குறிப்பு

இந்த காய்கறி ஜூஸில் வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. தேவை என்றால் ஐஸ் கியூப்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply