இதயநோய் வருவதை தடுக்கும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

Loading...

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் பெண்களுக்கு இதய நோய் வருவது மிகவும் குறைவு என ஆராய்ச்சியில் தெரியவருகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் மெடிசின், மாதவிடாய் நின்ற 50 வயது முதல் 79 வயதுடைய பெண்களிடம் ஆராய்ச்சியை மேற்கொண்டது.

ஆராய்ச்சியின் விளைவாக பொட்டாசியம் அதிகமாக எடுத்துக்கொண்ட பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் மேலும் அவர்களின் இறப்பு விகிதம் குறைவதாகவும் கண்டுபிடித்துள்ளது. பொட்டாசியம் நம் உடலில் புரதம் சரியான முறையில் சேர்வதற்கும், சதை வளர்ச்சிக்கும், கார்போஹைட்ரட்டை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
ஆராய்ச்சியின் இறுதியாக பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொட்டாசியம் அதிகம் காணப்படும் உணவுகள் :

வாழைப்பழம்,
ஒரு சில பயறு வகைகள்,
பால்,
இனிப்பு உருளை கிழங்கு,
வெள்ளை பீன்ஸ்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply