அளவான கொழுப்புடன் சமைக்கும் டீப்ஸ்

Loading...

இன்றைய சூழலில் நம் ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது பெரிய விஷயமாகிவிட்டது. வேகமாக செல்லும் மக்கள் இப்போது நம்பியிருப்பது ஃபாஸ்ட் ஃபுட்டை தான்.

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதற்காக ஒன்றும் கடுமை வாய்ந்த உணவுப்பழக்கத்தை கடை பிடித்து ஐஸ்க்ரீம், கேக் போன்ற உணவுகளை தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு பதிலாக அன்றாடம் உண்ணும் உணவுகளில் சிறு மாற்றங்களும், சமைக்கும் முறையில் சிறிய மாற்றங்களையும் கொண்டு வந்தால் போதுமானது.

கொழுப்பின் அளவை குறைந்த அளவில் பராமரிக்கவும் :

கொழுப்பை சுத்தமாக ஒதுக்க தேவையில்லை, அதனை குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் சுத்தரிக்கப்படாத இயற்கை கொழுப்புகளை கொண்ட ஆலிவ் ஆயில், நட்ஸ், விதைகள், மீன், சோயா மற்றும் அவகேடோ/வெண் ணெய் பழங்களை உபயோகிக்கலாம்.

ஆடை நீக்கிய பால் அல்லது பசுவின் பாலை பயன்படுத்தவும் :

கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள பாலுக்கு பதிலாக, ஆடை நீக்கிய பால் அல்லது பசுவின் பாலை பயன்படுத்துங்கள். மேலும் தயிர் வேண்டுமானால், ஆடை நீக்கிய பாலில் இருந்து தயார் செய்து கொள்ளுங்கள்.

பொரியல் உணவுகளை தேர்ந்தெடுக்கவும் :

உணவுகளில் நிறைய பொரியல்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

சமைக்கும் ஸ்டைலை மாற்றவும் :

வாட்டுதல், வதக்கல், வேக வைத்தல், கனலில் வேக வைத்தல், மெதுவாக சமைத்தல், வறுத்தல் போன்ற சமைக்கும் முறையை பின்பற்றுங்கள்.

நான் ஸ்டிக் சட்டிகளை பயன்படுத்தவும் :

நான் ஸ்டிக் சட்டிகளை சமைக்க பயன்படுத்தினால், அதிக எண்ணெய் மற்றும் வெண்ணெய் செலவாகாது. அதனால் ஆரோக்கியமான உணவை சமைக்கலாம்.

சமையல் ஸ்ப்ரே பயன்படுத்தவும் :

சமைக்கும் போது கொழுப்பின் அளவை குறைக்க வேண்டுமா? அப்படியானால் சமையல் ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள். இதனை சிறிது அளவு சமையலுக்கு பயன்படுத்தினால் போதுமானது.

உப்பு சேர்க்கும் முறை :

கைக்கு வந்த அளவில் உப்பை உணவில் சேர்ப்பதற்கு பதில் முதலில் உணவை ருசித்து பாருங்கள்.

சமைத்து முடிக்கும் நேரத்தில் சமைத்த காய்கறிகளில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய், வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றைப்பயன்படுத்தலாம். இது உப்பு சேர்த்தால் கிடைக்கும், அதே சுவையை நமக்கு அளிக்கும்.

எண்ணெய்க்கு பதில் மாற்றுப்பொருட்களின் பயன்பாடு :

எண்ணெய்க்கு பதிலாக மாமிசத்தை அவித்த நீர், ஒயின், எலுமிச்சை ஜுஸ், வினிகர் அல்லது தண்ணீரை கூட பயன்படுத்தலாம். இவை அனைத்தும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, எண்ணெய் பயன்பாட்டையும் குறைக்கும்.

மீன்களை அதிகமாக உண்ணுதல் :

அதிக அளவு புரதம், குறைந்த அளவிலான கொழுப்புகள் மற்றும் தேவையான அளவு ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அடங்கியுள்ள மீன்களை அதிகமாக உண்ணுங்கள். குறைவான கொழுப்பளவை கொண்ட பால் பொருட்களை பயன்படுத்துங்கள் :

சூப் அல்லது சாஸ்களில் க்ரீமை பயன்படுத்துவதற்கு பதில், குறைவான கொழுப்பை கொண்ட தயிர், பால், ஆடை நீக்கிய பால் அல்லது கார்ன் ஸ்டார்ச்சை பயன்படுத்தலாம்.

மாமிசத்தில் அதிக கொழுப்புள்ள பாகங்களை நீக்கவும் :

கோழியில் அதன் தோலை நீக்கி விடவும், அதே போல் ஆட்டின் இறைச்சியில் உள்ள அதிக கொழுப்புள்ள பாகங்களை நீக்கி விடவும். இது கலோரிகளை குறைத்து, ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும்.

மூலிகை மற்றும் கறிமசால் பொருட்களின் பயன்பாடு :

சமையலுக்கு தேவையான மூலிகைகளும், இலை செடி கொடிகளையும் பயன்படுத்தி உணவுக்கு சுவை மற்றும் வண்ணத்தை கொடுக்கலாம். மேலும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பைட்டோஓய்ஸ்ட்ரோஜென் இவைகளில் வளமையாக உள்ளது. பல சமயங்களில் உப்பு மற்றும் எண்ணெய்க்கு, சிறந்த மாற்றாக அமையும் மூலிகை மற்றும் கறிமசால் பொருட்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply