40 வயதைக் கடந்த பெண்களுக்கு மட்டும்

Loading...

மகளாக, மனைவியாக, தாயாக, முதியவராக என பிறப்பு முதல் இறப்பு வரை பலநிலைகளை பெண்கள் கடந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் மனம் மற்றும் உடல் அளவிலும் வெவ்வேறு பல வகையான மாற்றங்களையும் அடைகிறார்கள்.

அந்த காலகட்டங்களில் அவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களும் எழாமல் இல்லை.

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் மாதவிடாய் நிற்கும் காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு கடந்து செல்கிறார்கள்.

40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள்

பெண்கள் தங்களின் 45 முதல் 50 வயதைக் கடந்ததும் 12 மாதங்களுக்கு மேல் மாதவிலக்கு சுழற்சி ஏற்படாமல் இருந்தால், அவர்களின் சினைப்பையில் இருந்து கருமுட்டை உற்பத்தியாவது நின்று, அவர்கள் மெனோபாஸ் நிலையை அடைந்து விட்டார்கள் என்று அர்த்தமாகும்.
பெண்களின் 40 வயதுக்குப் பின் மாதவிலக்கு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்களின் சுரப்புகள் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு சீரற்ற மாதவிலக்கு, பிறப்புறுப்பு உலர்ந்துபோதல், தூக்கமின்மை, உடல் எடை அதிகரிப்பு, சருமம் உலர்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் என்பது பெண்களின் மன உணர்வுகளில் தொடங்கி, சிறுநீர்க் கசிவு வரை அனைத்துக்கும் காரணமாக இருக்கும் ஹார்மோன் ஆகும்.
பெண்களின் எலும்பு, இதயம், கர்ப்பப்பை, குடல் தொடர்பான செயல்பாடுகள், விட்டமின் மற்றும் தாதுக்களை கிரகித்தல் போன்ற அனைத்து செயலாடுகளுக்கும் ஈஸ்ட்ரோஜன் உதவுகிறது. எனவே பெண்களின் உடம்பில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, அவர்களின் உடலில் பிரச்னைகள் அதிகரிக்கின்றது.
பெண்களிடம் அடிக்கடி எரிச்சல், திடீரென்று எரிச்சல் இல்லாமல் இது போன்று மாறி மாறி தோன்றும். பின் அவர்களின் உணர்வுகளில் பல மாற்றங்கள் ஏற்படுவது தான் மூட் ஸ்விங் ஆகும். இது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவதால் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.
பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பின்பு எலும்பு மெலிதல் பிரச்சனை கள் அதிகமாக தாக்குகிறது. இதர்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களில் செயல்பாடுகள் குறைவது தான் காரணமாக உள்ளது.
ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால், பெண்களின் பிறப்புறுப்பு பகுதி வறண்டு போவதுடன், உயவுத்தன்மை போன்றவை இருக்காது. இதனால் அவர்களுக்கு உடலுறவில் ஈடுபடும் ஆர்வம் குறைந்து மார்பகம், முடி, இடுப்பு என்று அவர்களின் உடல் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply