பெண்கள் பாதுகாப்பாக இருக்க அவசியம் பகிர வேண்டிய பதிவு

Loading...

இந்த 21 -ம் நூற்றாண்டில் உலகம் பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது. பண்டை காலம் போல இப்போது இல்லை, பெண்கள் ஆண்களை போல வெளியிடங்களுக்கும், வேலைகளுக்கும் போகிற காலமிது.

அதே சமயத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விகுறியாகி உள்ளது.

சரி, பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கிய வழிகள் என்னென்ன?

எந்தவொரு புதிய மனிதர்களிடம் பேசும் போதும், கலந்துரையாடும் போதும் அவர்களையும், அவர்கள் செயல்பாடுகளையும் பெண்கள் நன்கு கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

பெண்கள் வெளியில் போகும் போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை தொடர்ச்சியாக பின் தொடர்வது போல உணர்ந்தால் உடனே வீட்டில் தெரியப்படுத்த வேண்டும்.

இப்போது செல்போன்கள் இல்லாத மனிதர்களே இல்லை என ஆகிவிட்டது. பெண்கள் தங்கள் செல்போன் எண்களை நெருங்கிய நண்பர்களுக்கு மற்றும் நம்பிக்கையுடையவர்களுக்கு மட்டுமே தர வேண்டும்.

வீட்டு முகவரியோ, தங்களை பற்றிய விபரங்களையோ பெண்கள் அடையாளம் தெரியாத மனிதர்கள், அது ஆணோ அல்லது பெண்ணோ அவர்களிடம் பகிரவே கூடாது.

கல்லூரியில் படிக்கும் பெண்களோ அல்லது வேலை செய்யும் பெண்களோ தங்கள் தோழன், தோழிகளுடன் அதிகம் பொது இடங்களில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது.

பெண் குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்துல்களுக்கு ஆளாகும் கொடுமை தினசரி நிகழ்வாகி விட்டது. அதனால் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைளை அதிக அக்கரையுடன் பார்த்து கொள்வது அவசியமாகும்.

பொதுவாக நகைகள் என்றாலே பெண்களுக்கு பிரியம் இருக்கும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விலை உயர்ந்த அதிக நகைகளை அணியாமல் இருப்பது நல்லது.

பெண்கள் வீட்டில் இருந்தால் அருகில் லேண்ட்லைன் தொலைபேசியோ அல்லது செல்போன்களோ இருக்க வேண்டியது அவசியமாகும். இது எதாவது ஆபத்து நேர்ந்தால் உதவும்.

தேவையற்ற தொலைப்பேசி எண்களுக்கு அழைப்பதோ அல்லது தொடர்ச்சியான அழைப்புகள் வருமானால் விட்டில் தெரியப்படுத்த வேண்டும்.

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என தெரியாது. அதனால் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ கவனமுடன் பழக வேண்டியது மிக முக்கியமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply