பெண்கள் எதற்காக மறைக்க வேண்டும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

Loading...

பெண்களின் ஆடை குறித்து விவால்வ்(WEvolve) என்ற அமைப்பு வீடியோ ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது.

பெண்கள் என்னதான் உடல்களை மறைக்கும் அளவுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தாலும், ஆண்களின் பார்வை அவர்களின் உடல் பாகங்களை துளைக்காமல் விடாது.

ஆண்களின் காமப்பார்வையால் தர்மசங்கடத்திற்கு ஆளாகும் பெண்கள், என்னதான் அழகான ஆடைகளை அணிந்து சென்றாலும், தங்கள் எதிரே ஆண்கள் வரும்போது அவர்களின் கைகள் தனிச்சையாகவே ஆடைகளை சரிசெய்ய செல்கிறது.

வீட்டில், வெளியில், அலுவலகத்தில், வங்கியில், மருத்துவமனையில் என எந்த இடமாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் யாரோ ஒருவர் பெண்களை வெறித்து பார்ப்பதற்கு இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

அப்படி யாரும் இல்லை என்றாலும் கூட, யாருமற்ற தனிமையிலும்கூட, கலைந்த தன் ஆடைகளை அவசரமாக சரிசெய்தபடி, எப்போதும் தன் உடல் காமக்கண்களால் கவனிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றது என்கிற மன நிலையோடு பெண்கள் வாழ்கிறார்கள்.

வீட்டில், அலுவலகத்தில், சாலைகளில் ஆண்களும், பெண்களும் பரிமாறிக்கொள்ளும் பார்வைகள் உடலைக் கடந்ததாக இருக்க வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதையுடன் அணுகி ஒருவரின் விருப்பங்களை மற்றவர் ஈடேற்றிக்கொடுக்க வேண்டும்.

தங்கள் ஆடையை துளைக்கும் பார்வையை பற்றி பெண்கள் கவலைப்படதேவையில்லை, அவள் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லும் ‘எல்(Elle)’ நிறுவனம் ‘விவால்வ்(WEvolve)’ என்ற அமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

காமப்பார்வை விடயத்தில் ஆண்கள் ஒருபோதும் விடுதலை கொடுப்பதில்லை, மாறாக நாம் தான் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே தான் ஆடை கிடக்கட்டும்….அவள் அப்படியே இருக்கட்டும் என்பதை இந்த வீடியோ வலியுறுத்துகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply