பெண்களுக்கு வெட்கத்தின் அறிகுறிகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா

Loading...

பெண்கள் திருமணம் என்ற பேச்சை எடுக்கும் போது, அதிக நாணம் கொள்வார்கள். இது ஒரு சாதாரண நிகழ்வு தான்.
ஆனால் அதற்கான காரணம் இருக்கிறது. என்னவெனில், பெண்களுக்கு அதிகமான கற்பனை திறன் உள்ளது. அந்த திறனால் தன்னுடைய எதிர்காலத்தை பற்றிய கற்பனைகளை முன்னதாகவே மனதில் வைத்து இருப்பார்கள்.
எனவே பெரியவர்கள் பெண்களின் முன் அவர்களின் திருமண பேச்சை எடுக்கும் போது, அவர்களின் கற்பனை திறன் நினைவுக்கு வருவதால், அதிக வெட்கம் கொள்கிறார்கள்.
திருமணம் செய்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும் பெண்களின் அறிகுறிகள்

புதிதாக திருமணம் முடிந்த தம்பதிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும், தங்களின் திருமண வாழ்க்கையை பற்றி கற்பனை செய்ய தொடங்குவார்கள். மேலும் அவர்களிடம் சென்று அவர்கள் வாழ்க்கை குறித்த அனுபவங்களை ஆர்வமாக கேட்பார்கள்.
காதலனுடன் இருக்கும் போது தன் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மகிழ்ச்சி அடைவதும், தனிமையில் இருக்கும் போது, அடிக்கடி புன்னகை செய்வதும் ஒரு அறிகுறியாகும்.
பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், தனது காதலனுடைய குடியிருப்பு மற்றும் அவர்களின் வர்த்தகம் குறித்த வருமானம் ஆகியவற்றை சரியான முறையில் பகிர்ந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு முறையும் மற்றவர்களின் திருமணத்திற்குச் செல்லும் போது, அந்த திருமணத்திற்கு செய்யப்பட்டிற்கும் ஏற்பாடுகள் மற்றும் அதன் திட்டத்தை பற்றி நன்றாக கூர்ந்து கவனிப்பார்கள்.
திருமணம் செய்துக் கொள்ளும் மற்றவர்களின் திருமண அட்டைகளை பாதுகாப்பாக எடுத்து வைப்பார்கள். ஏனெனில் அதில் இருக்கும் மணமக்களின் பெயரை அழித்து விட்டு அதன் அருகில் தன் பெயரையும் தனது காதலன் பெயரையும் எழுதி பார்த்து ரசிப்பார்கள்.
தனது பெற்றோர்கள் ஏதேனும் முக்கியமான விஷயம் கூற வேண்டும் என்றால் அதில் மிகவும் ஆர்வமாகவும், பல கற்பனை உலகத்திலும் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் தனது திருமணம் குறித்து பேசுவார்கள் என்று அதிக எதிர்பார்ப்பில் துள்ளி குதிப்பார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply