பெண்களுக்கு ஏற்படும் வாட்ஸ் ஆப் சிக்கலை எப்படி தவிர்ப்பது இதோ சூப்பர் ஐடியா

Loading...


தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் மற்றும் ஆபத்துகள் ஏராளம்.

அந்த வகையில், வாட்ஸ் ஆப்பில் ஏற்படும் பிரச்சனைகள் பெண்களை எவ்வாறு எப்படி பாதிக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

வாட்ஸ் ஆப்பில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

நம்முடைய வாட்ஸ் ஆப் நம்பர் தெரியாத ஒருவருக்கு கிடைக்கும் போது, அவர்கள் நாம் வைத்திருக்கும் நமது புகைப்படத்தை மிகவும் எளிதில் பதிவிறக்கம் செய்து விடுவார்கள்.

மேலும் நமக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் கூட நமது ஸ்டேட்டஸ் மூலம் நம்மை தொடர்ந்து கண்கானித்து நம்மை பற்றி அறிந்துக் கொள்ளும் வாய்ப்பினை பெறுகிறார்கள்.

தோழிகள் உடன் வாட்ஸ்ஆப் குரூப்களில் இணைக்கப்படும் போது, நம்முடைய நம்பர் அந்த குரூப்பில் இருக்கும் அனைவருக்கும் பகிரப்படுகிறது.

இது போன்ற சில காரணங்கள் மூலம் தான் பெண்கள், வாட்ஸ் ஆப்பின் மூலம் தேவையற்ற பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பினை பெறுகிறார்கள்.

வாட்ஸ் ஆப் பிரச்சனையை தடுப்பது எப்படி?
வாட்ஸ் ஆப்பின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, வாட்ஸ்ஆப் செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும்.
அதாவது, பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று நம்முடைய புகைப்படம், ஸ்டேட்டஸ் மற்றும் லாஸ்ட் சீன் போன்ற தகவல்கள் அனைத்தும் My contact அல்லது Only Me என்ற ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதனால் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள், நம்மை பற்றி தெரிந்துக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பினை பெற முடியாது.
மேலும் நமக்கு தெரியாத ஒருவர் நமக்கு குருஞ்செய்திகளை அனுப்பினால் அவர்கள் மீண்டும் அனுப்ப முடியாமல் தடுப்பதற்கு, ப்ளாக் (Block) ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply