பலாத்காரத்தின் போது நான் அனுபவித்த வலிகள் கண்ணீரில் ஆழ்த்திய கடிதம்

Loading...

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தனது காதலனுக்கு, தான் பட்ட வலிகள் மற்றும்மன வேதனை குறித்து காதலி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

தொர்டிஸ் இல்வாவும், டாம் ஸ்ட்ரேஞ்சரும் (Tom Stranger) கடந்த 1996-ஆம் ஆண்டு முதன்முதலாக ஐஸ்லாந்தில் சந்தித்தனர்.

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இல்வாவின் பள்ளி விழாவில் அவர் நடனமாடுவதை தன் காதலனுக்கு தெரிவிக்க அந்த விழாவில் டாமும் கலந்து கொண்டிருக்கிறார்.

நடனம் முடிந்ததும் இருவரும் மது அருந்தியிருக்கிறார்கள். மது அருந்தியதால் இல்வாவை தன் வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார் டாம். ஒருகட்டத்தில் தன்னிலை மறந்த டாம், இல்வாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபற்றி டெட் டாக்ஸ் நிகழ்ச்சியில் பேசிய இல்வா,

பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, எனக்கு சற்றே சுயநினைவு திரும்பியது. ஆனால், என் உடல் மிக மிக பலவீனமாக இருந்ததை உணர்ந்தேன்; பலாத்காரம் செய்யப்பட்டதன் தீவிரத்தை அப்போதுதான் முழுமையாக உணர முயன்றேன். ஆனால் தாங்க முடியாத வலியையும் அனுபவித்திருந்தேன்.

ஒருகட்டத்தில் விவேகமாக இருக்க நினைத்து, என் கடிகாரத்தில் இருக்கும் நொடிகளை மனத்திற்குள் எண்ண ஆரம்பித்தேன். இரண்டு மணி நேரத்திற்கு 7,200 நொடிகள் இருப்பதை அந்த இரவிலிருந்துதான் நான் தெரிந்துகொண்டேன்” என்று சலனமற்ற குரலில் விவரித்தார் இல்வா.

அப்போது, என் வயது 16; டாமுக்கு 18 வயது. பாலியல் வன்முறைக்கு ஆளாகியது, என்னுடைய தவறு இல்லை என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு 10 ஆண்டுகள் பிடித்தன. நடனமாடிய அன்று நான் அணிந்திருந்த குட்டைப்பாவாடையோ, சிரிப்போ அல்லது குழந்தைத்தனமாக நான் டாமின் மீது வைத்திருந்த நம்பிக்கையோ நான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக ஒரு காரணமாக இருந்திருக்காது என்று நம்புகிறேன்.

அந்த ஓர் இரவில், நான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகாமல் தடுத்திருக்க டாமால் முடிந்திருக்கும்” என்று மென்மையாக பேசிய இல்வாவைப் பார்த்துக் கொண்டிருந்தார் டாம்.

ஒன்பது ஆண்டுகள் கழித்து, பாலியல் பலாத்காரத்தன்று தான் எப்படி உணர்ந்தேன் என்பதை, டாமுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் இல்வா. ஆனால், அந்த கடிதத்துக்கு டாமிடம் இருந்து பதில் கடிதம் வரும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

டாம் எழுதிய கடித வரிகள் இவைதான்!

‘என் மனதில், எங்கோ ஒர் ஓரத்தில், இது பாலியல் பலாத்காரமல்ல… உடலுறவு என்று பலமுறை என்னை நானே தேற்றிக்கொள்ள முயன்றேன்; உண்மையில் நடந்ததை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தேன்; அதை உணர்ந்த போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் தவித்தேன். ஆனால், நிச்சயமாக, நான் அளவில்லாத தவறை செய்திருக்கிறேன் என்பதை அறிவேன்.

அதன் பிறகு நல்ல சகோதரராகவும், நல்ல மகனாகவும் நடந்துகொண்டு,‘நல்ல மனிதர்’ என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்ள போராடினேன். என்னுடைய இருண்ட பக்கத்தை பலமுறை புரட்டி என்னை நானே மன்னிக்க முயன்றேன். மிகுந்த மன வருத்தத்துடன் தப்பை ஒப்புக்கொள்கிறேன் என தன் தவறை ஒப்புக் கொண்டிருக்கிறார் டாம்.

இதை இருவரும் டெட் டாக்ஸ் மேடையில் விவரித்துள்ளனர். தற்போது, இவர்கள் இருவரும், தங்களின் வாழ்க்கையை மாற்றிய சம்பவத்தை, ’செளத் அஃப் ஃபர்கிவ்னஸ் (South Of forgiveness)’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply