தன்னை ஏளனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த வீர மங்கை

Loading...

யாஸ்மீன் மானக் என்ற பெண், பாடி பில்டிங்கில் அசத்தி இந்தியாவின் இரும்பு பெண் என்று நிரூபித்து, தனது உருவ தோற்றத்தை வைத்து அசிங்கமானவள் என்று கிண்டல் செய்தவர்களுக்கு தக்க அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பெரும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளார்.

யாஸ்மீன் தனது சிறுவயதில் எடுத்துக் கொண்ட ஒரு தவறான மருந்து அவரை உடல் மற்றும் உடல் தோற்றம் ரீதியாக முற்றிலும் அவர் ஒரு ஆண் தோற்றத்தை அடைந்தார்.

இதனால் இவரின் வாழ்க்கையில் பல இடங்களில் இவரைப் பற்றிய ஏளனம் பேச்சுக்களை கேட்கும் நிலை ஏற்பட்டது.

எனவே தன்னம்பிக்கையை இழந்த யாஸ்மீன் மீண்டும் தன்னம்பிக்கை பெற ஜிம்மிற்கு சென்று கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்டு, பாடி பில்டிங்கில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தார்.

பின் யாஸ்மின் 300 ஆண்கள் பாடி பில்டிங்கில் சாதித்தது மட்டுமின்றி, சொந்தமாக ஒரு ஜிம்மும் நடத்தி, அதில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இவ்வாறு பல திறமைகளை கொண்ட யாஸ்மீன் தொழிலதிபர், ஃபிட்னஸ் இன்ஸ்ட்ரக்டர், பாடி பில்டர், பைக்கர் என தனது அழகான திறமைகளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற மிஸ்.ஆசியா பாடி பில்டிங் போட்டியில், கலந்துக் கொண்ட யாஸ்மீன், வெற்றி பெற்று, வெண்கல பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.

மேலும், யாஸ்மீன் மானக் கடந்த 2016-ஆம் வருடம் நடைபெற்ற பாடி பில்டிங் ஃபெடரேஷன் நடத்திய மிஸ் இந்தியா போட்டியிலும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply