கவர்ச்சி குறைய இதுவும் ஒரு காரணம்

Loading...

குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவீடனின் கரோலின்சா நிறுவனம் மற்றும் நியூயோர்க் பலகலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7½ மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை புகைப்படம் எடுத்தனர்.

அதே போன்று 4¼ மணி நேரம் தூங்க வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கியவர்களின் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது.

இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தூக்கமின்மை பிரச்சனையால் உடல்நலக்குறைபாடுகள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தான் கேள்விபட்டிருப்போம், தற்போது கவர்ச்சியும் குறைந்துவிடும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply