கம்பீரமாய் வலம் வரும் வீரப் பெண் சுவாரசியமான உண்மை கதை

Loading...

பெண்கள் என்றாலே ரிஸ்க் இல்லாத வேலைகளுக்கு தான் போக வேண்டும் என்ற காலம் மலையேறி விட்டது.

தற்போது பல விதமான வேலைகளில் பெண்கள் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

அப்படி பொலிஸ் உயர் அதிகாரியாக தற்போது சாதித்து கொண்டிருப்பவர் தான் Manjita Vanzara.

நான் பிறந்த குடும்பம் பொலிஸ் குடும்பம், குடும்பத்தில் பலர் உயர்ந்த பதவியில் உள்ளார்கள். ஆனால் எனக்கு அந்த பணியின் மீது ஈர்ப்பு இருந்ததே கிடையாது.

பள்ளிப்படிப்பை முடித்ததும் நான் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தேன், அதை முடித்து விட்டு பேஷன் டெக்னாலஜி படித்தேன்.

நான் வசதியான குடும்ப பெண் என்றாலும், அப்படி நான் வளர்க்கப்படவில்லை. பேருந்தில் தான் வெளியில் போவேன், சாதாரண உடை தான் அணிவேன்.

உலகில் கஷ்டங்களை புரிந்து கொள்ள அப்படி என் பெற்றோர் என்னை வளர்த்தனர்.

இந்த சமூகம் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது, நாம் திரும்ப சமூகத்துக்கு தர போகிறோம் என திடீரென எனக்கு தோன்றி பொலிஸ் ஆகி சேவை செய்யலாம் என முடிவெடுத்தேன்.

அதற்கான சிவில் சர்வீஸ் பரீட்சையை கடுமையான படிப்பின் மூலம் எதிர்க்கொண்டு வெற்றியும் பெற்றேன்.

தற்போது மன நிறைவான பணியில் இருப்பதாக உணர்கிறேன், பலரின் பிரச்சனையை அதிலும் முக்கியமாக பெண்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்.

என் தோழிகள் வேறு பணிகளில் லட்சக்கணக்காக சம்பாதிக்கிறார்கள், ஆனால் எனக்கு அதை பற்றி கவலையில்லை.

மற்றவர்களுக்கு உதவும் இந்த பொலிஸ் பணியே என்னை பொருத்த வரை மிகச்சிறந்தது.

பொதுவாக பெற்றோர்கள் தங்கள் மகள்கள் டாக்டர், இன்ஜினியர்கள் ஆக வேண்டும் என தான் விரும்புகிறார்கள்.

இதை விட்டு வெளியில் வந்து மகள்களை பொலிசாக ஆக்க அவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என கூறுகிறார் இந்த கம்பீர பெண் அதிகாரி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply