கதறை திறந்துகொண்டு கழிவறைக்கு செல் கண்ணீர் வடிக்கும் திருநங்கை

Loading...

திருநங்கைகள் இந்த உலகின் மூன்றாம் பாலினம் என்று அழைக்கப்பட்டாலும், மக்களின் ஏளனப்பார்வைகள் அவர்கள் மீது விழுவது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதில், ஒரு சில திருநங்கைகள் ஏளனப்பார்வைகளை தவிடுபொடியாக்கி தங்கள் வாழ்வில் சாதனைகளை மேற்கொள்கிறார்கள்.

அப்படி சாதித்தவர்களின் ஒருவர் தான் திருநங்கை கௌரி சவந்த். குறும்பட ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமாகியுள்ள இவர் தனது வாழ்வில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் பிறந்தது புனேயில், சிறு வயதில் அம்மா இறந்துவிட்டதால் பாட்டி வீட்டில் வசிப்பதற்காக மும்பை வந்துவிட்டோம், என் அப்பா ஒரு காவல்துறை அதிகாரி.

எனக்கு கணேஷ் என்று பெயரிட்டு வளர்த்தனர். 8 ஆம் வகுப்பு படித்தபோது தான், வளையல் மற்றும் பொட்டு வைத்துக்கொள்வதை அதிகம் விரும்ப ஆரம்பித்தேன்.

குர்தா என்பது ஆண் பெண் இருபாலரும் அணிந்துகொள்ளும் ஆடையாக இருந்ததால், குர்தா அணிந்து பொட்டு வைத்து, பூ வைத்து வெளியில் செல்வேன்.

வீட்டுக்கு வரும்போது அதனை பைக்குள் மறைத்துவைத்துவிடுவேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சகமாணவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது.

எனது ரத்தத்தால் அவனுக்கு காதல் கடிதம் எழுதினேன். அவனுக்காக பள்ளி வாசலில் தினமும் காத்திருப்பேன், ஆனால் அவன் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதை அறிந்து அதனை விட்டுவிட்டேன்.

எனது பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எனது தந்தை கண்டுபிடித்துவிட்டார், நான் ஒரு திருநங்கையாக இருந்தால் குடும்பத்திற்கு அவமானம் என கருதி என்னை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

கதவை சாத்தாமல் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டேன், வெளியில் செல்லும்போது பெண்ணாகவும், வீட்டுக்குள் ஆணாகவும் என இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்.

ஒரு கட்டத்தில் இந்த வாழக்கையை சமாளிக்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறியபோது எனக்கு அடைக்கலம் ஹம்சபர் ட்ரஸ்ட்’தான். இவர்களிடம் அடைக்கலம் அடைந்த பின் என் வாழ்வின் அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

அப்போது எனது வீட்டில் அருகில் வசித்து வந்த பாலியல் தொழிலாளி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதால் அவளது சிறுவயது மகள் காயத்ரி பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டாள்.

இந்த சிறுவயதில் அவள் ஏன் இவ்வளவு கொடுமைகளை சந்திக்க வேண்டும் எனக்கருதி, அவளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தேன்.

காயத்திரியின் வரவால் எனது தாய்மையை உணர்ந்தேன். அவளை பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை என கூறுகிறார் கௌரி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply