ஒரே பெண்ணை திருமணம் செய்த கிராம ஆண்கள்

Loading...

மத்திய பிரதேசத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மோரேனா எனும் கிராமத்தில் ஒரே பெண்ணை பலர் திருமணம் செய்துக் கொள்ளும் பலதாரமணம் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த பகுதியில் வாழும் கிராம மக்கள், ஒரே பெண்ணை பலர் திருமணம் செய்துக் கொள்வதற்கு ஆண், பெண் எண்ணிக்கை சமநிலையில் இல்லை என்பதை காரணமாக கூறுகின்றனர்.

ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த பல ஆண்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

அதுவே வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்களாம்.

மோரேனா எனும் இந்த கிராமத்தை சுற்றியிருக்கும் பல கிராமங்களிலும் இதை பாரம்பரிய சட்டமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தியாவில் இன்னும் பல இடங்களிலும் இதுபோன்ற விசித்திர முறை பின்பற்றப்படுவது தெரியவருகிறது.

அந்த வகையில், உத்தர்காண்ட்டில் ராஜோ வர்மா எனும் பெண் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

அதேபோல ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஓர் இனத்தை சேர்ந்த மக்கள், அண்ணன் தம்பிகளுக்கு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply