உதறித்தள்ளிய காதலனுக்கு பதிலடி கொடுத்த இளம்பெண்

Loading...

குண்டாக இருப்பதால் உதறித்தள்ளி விட்டு பிரிந்து போன காதலனுக்கு பதிலடி கொடுக்க பிரித்தானிய இளம்பெண் செய்த செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இங்கிலாந்தின் Wellingborough நகரை சேர்ந்தவர் Sian Ryan. இவர் ஒருவரை 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக நேசித்து வந்தார்.

இந்நிலையில் ஒருநாள் Sian Ryanன் உடல் எடையை காரணம் காட்டி அவரது காதலர் திடீரென பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் Sian Ryan மனமுடைந்துவிட்டார். பிரிந்து போன காதலனை நினைத்து தூக்கமின்றி தவித்தார்.

இந்நிலையில் தனது நிலையை உணர்ந்த அவர் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று திட்டம் போட்டார்.

24 மணி நேரமும் இயக்கும் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்த அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார். நடு இரவிலும் அவர் தனது விடா முயற்சியை தொடர்ந்தார்.

18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவரது உடலமைப்பில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. குண்டாக இருந்த அவர் அழகான சிலையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

இது பற்றி Sian Ryan கூறுகையில், நான் ஆரம்பத்தில் பார்ட்டி கேர்ளாக தான் இருந்தேன். உணவில் அக்கறை கொண்டதே கிடையாது. இதன் காரணமாக எனது எடை அதிகரிக்க ஆரம்பித்தது.

எனது காதலர் இதை காரணம் காட்டி என்னை விட்டு பிரிந்து போன போது மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் நான் இப்போது இப்படி மாறுவதற்கு அதுவே காரணமாகிவிட்டது.

இதன் மூலம் நான் அவரை வென்றுவிட்டதாக நினைக்கவில்லை. அவரது நினைவுகளில் இருந்து ஒதுங்கி இருக்கவே முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply