உணவகத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் வைரலாகும் வீடியோ

Loading...

கொல்கத்தாவை சேர்ந்த விஜயா தாஸ் என்ற இளம் பெண் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது தந்தையுடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அந்த உணவகத்தில் ஆட்டம் பாட்டம் களைகட்டியுள்ளது.

அங்கு தனது தந்தையுடன் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த விஜயாவை, அங்கு வந்திருந்த நபர் ஒருவர் உற்றுப்பார்த்த வண்ணம் இருந்துள்ளார். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான விஜயா, தனது தந்தையை தனது எதிரில் அமர சொல்லி, மறைவாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்துள்ளார்.

ஆனால், அந்த நபரோ, விஜயா தனது இருக்கையை மாற்றிக்கொண்டது போன்று, தனது இருக்கையையும் மாற்றிக்கொண்டு மீண்டும் விஜயாவை உற்றுநோக்கியுள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஜயா, அனைவர் முன்னிலையிலும் அந்த நபரின் அருகில் சென்று திட்டியுள்ளார். விஜயாவின் சத்தத்தை கேட்டு பலரும் திரும்பி பார்த்துள்ளனர். ஆனால் கொண்டாட்டத்தில் கவனமாக இருந்த காரணத்தால் அங்கிருந்தவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதனைத்தொடர்ந்து விஜயா உணவக உரிமையாளரிடம் சென்று குடித்துவிட்டு, தவறான முறையில் என்னை உற்றுநோக்கும் இந்த நபரை வெளியேற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், உணவக உரிமையாளரோ, இங்கு அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாரையும் நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனவே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்த உணவகத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் கோபம் கொண்ட விஜயா தனது தந்தையுடன் அந்த உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் தனக்கு இப்படி ஒரு அவலம் நேர்ந்தும் இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தது வேதனையளிக்கிறது என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply