இழந்த தன்நம்பிக்கையை அற்புதமாக மீட்டெடுத்த மேரி க்யூரி அப்படி என்ன செய்தார் தெரியுமா

Loading...

அறிவியல் துறையில் தன்னுடைய கடுமையான தன்னமிக்கை மிகுந்த முயற்சியால், வென்று இரண்டு நோபல் பரிசுகளை வென்றவர் தான் மேரி க்யூரி.
போலந்து நாட்டில் பிறந்த மேரி க்யூரி அவரின் சிறுவயதிலே எந்த ஒரு செயலில் அதிக ஈடுபாட்டுடன் தன்னம்பிக்கையாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்.
மேரி க்யூரியின் குடும்பச் சூழ்நிலை காரணமாக , தனக்கு விருப்பம் மிகுந்த மருத்துவம் படிப்பை படிக்காமல் முடியாமல், இயற்பியல், வேதியியல் சார்ந்த துறையில் படிக்க நேர்ந்தது.
அவர் தனக்கு விருப்பம் இல்லாத துறையில் படிப்பை தொடர்ந்தாலும் அதில் முழு ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு படித்து, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று, ஃப்ரான்ஸ் நாட்டின் முதல் பெண் முனைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

பின் மேரி க்யூரி தன்னுடன் பணியாற்றிய ப்யாரி க்யூரியுடன் பழகிய நட்பு காதலாக மாறியதால், இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள்.
திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் சேர்ந்து, கதிரியக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆபத்தானவை என்பது தெரிந்தும் அந்த ஆய்வினை மேற்கொண்டு அதில் நோபல் பரிசுகளை பெற்றார்கள்.

மேரி க்யூரியின் வாழ்க்கையில் ஒரு நாள் தன் வாழ்க்கைக்கும், ஆய்வுக்கும் துணையாக இருந்த அவரின் கணவர் ப்யாரி க்யூரி ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார்.

எனவே மேரி அந்த இழப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்தார்.
மேரி க்யூரி இழந்த தன்னம்பிக்கையை மீட்க என்ன செய்தார்?
தனது கணவரை இழந்து ஆய்வுகளைத் தொடர முடியாமல் தவித்த மேரி க்யூரி தன்னுடைய மனச் சோர்வைச் சரி செய்யும் மருந்து, தனது கிராமம் என்று தெரிந்துக் கொண்டார்.
பின் அவர் இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு, மனக்காயம் ஏற்படும் நேரங்களில் தனது கிராமத்துக்குச் சென்று பழகிய மனிதர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்த்தார்.

அந்த கிராமத்தில் பல மணி நேரங்களைச் செலவழித்து, மனம் முழுக்க தன்னம்பிக்கையை நிரப்பிக் கொண்டு அந்தப் புத்துணர்ச்சியோடு ஆய்வகத்திற்கு சென்று தனது சோர்வைத் தூரத்தில் எறிந்து முழு வேகத்தில் பணிகளைப் பார்த்து, அவரின் பழைய தன்னம்பிக்கையை மீண்டும் பெற்றார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply