இதை பெண்கள் மட்டும் கட்டாயமாக தெரிந்துக் கொள்ளுங்கள்

Loading...

பெண்கள் தங்களின் மாதவிடாய் நாட்களில் சோர்வாகவும், தொய்வாகவும் எனர்ஜி இல்லாமல் இருப்பார்கள்.

ஏனெனில் மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடம்பில் ஹார்மோன் மாற்றத்தினால் வெளிப்படும் உதிரப்போக்கினால் கடுமையான வயிற்று வலியை உணர்வாகள்.

எனவே நாம் மாதவிடாய் வலிகளை குறைப்பதற்கு, அதற்கு முன் ஒருசில உணவு பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

பெண்கள் மாதவிடாய் வலிகளை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் நாம் காலை உணவாக புரோட்டீன் நிறைந்த உணவுகள், முட்டை, வெண்ணெய், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் தங்களின் மொபைலில் Hacks Period என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து, அதில் தனக்கு ஏற்படும் மாதவிடாய் தேதியை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் மாதவிடாய் பற்றி தெரிந்துக் கொள்ள பயனுள்ளதாக இருக்கிறது.
மாதவிடாய் வருவதற்கு முன் நாம் ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. ஏனெனில் ஆல்கஹால் குடிப்பதால், அது நமது உடலில் ஆரோக்கியத்தை படிப்படியாக குறைத்து விடுகிறது.
மாதவிடாய் காலத்தில் நமது முகத்தின் சருமத்தில் பருக்கள் ஏற்படும். எனவே அந்த பருக்கள் அதிகரிக்காமல் இருப்பதற்கு, நாம் அடிக்கடி சுத்தமான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் உணவில் அதிகமாக உப்பை சேர்த்துக் கொள்ளக் கூடாது. மேலும் முக்கியமாக மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதை தவிர்த்து விட வேண்டும்.
உடல் பருமன் அதிகமாக கொண்ட பெண்கள் மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியை உணரக் கூடும் என்பதால், அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியை மேற்க்கொள்வது மிகவும் அவசியமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply