அலங்காரத்திற்கு பின்னால் இருக்கும் அலங்கோலம்

Loading...

பாலியல் தொழிலாளிகள் என்றாலே உடலை பணத்திற்காக விற்பவர்கள் என்ற கண்ணோட்டம் தான் உலகம் முழுவதும் இருக்கிறது.

ஆனால், அவர்கள் எப்படி அந்த தொழிலுக்குள் தள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு அங்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்னென்ன என்பது பற்றி நாம் சுத்தமாக அறிந்திருக்க மாட்டோம்.

பாலியல் தொழிலாளிகளின் அலங்காரத்திற்கு பின்னால், அலங்கோலமான பக்கங்களும் உள்ளன.

இந்த பாலியல் தொழிலால் பல்வேறு பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஒரு சில பாலியல் தொழிலாளிகள் வாடிக்கையார்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாலியல் தொழிலில் உள்ள பெண்கள் படும் துன்பத்தை தெரிந்துகொள்வதற்காக Girls Of Paradise என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தில் நீங்கள் ஒரு பெண்ணை தெரிவு செய்தால், உடனே ஒரு Chat Box Open ஆகும்.

அதில் அந்த பெண்ணுடன் நீங்கள் உரையாடும் வகையில் இணையத்தளம் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் சாட் செய்து கொண்டிருக்கையில், அந்த பெண்ணின் கொடுமையான புகைப்படம் திரையில் தோன்றும். அதாவது அந்த பெண் கொடுமையான முறையில் உயிரிழந்த பாலியல் தொழிலாளி ஆவார்.

அதன் பின்னர் அந்த சாட்டினை நீங்கள் நிறுத்திக்கொண்டு வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சாட் செய்யலாம்.

இந்த இணையதளத்தை ஆரம்பித்ததன் நோக்கமே, பாலியல் தொழிலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு உண்டாகும் கொடுமைகளை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக தான்.

நீங்கள் உரையாடும் சாட்டின் மூலம் பாலியல் தொழிலாளிகள் சந்தித்த கொடுமைகளை அறிந்துகொள்ளலாம்.

15 வயதில் கடத்தி செல்லப்பட்டு விபச்சாரத்தில் உட்படுத்தப்பட்ட பெண் கொடுமைகள் தாங்காமல் தற்கொலை செய்துக் கொண்டார்.

இவர் மட்டும் அல்ல ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துக் கொண்டவர், வேறு முறைகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் என பலர் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள்.

பல பாலியல் தொழில் புரிந்த பெண்கள் வாடிக்கையாளர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒரு ஒரு பெண், கொடூரமான வாடிக்கையாளரால் 54 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இணையதளத்தில் முகம் சிதைந்துபோன பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பெண்கள் அனைவரும் கொடுமையான முறையில் இறந்துபோனவர்கள் ஆவர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply