தீக்காயத்தினால் உண்டாகும் தழும்பை மறையச் செய்யும் சுலபமான வழிகள்

Loading...

உடல் அழகை கெடுப்பதில், தழும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தழும்புகளை நீக்குவது எளிதல்ல. ஆழமான தழும்புகளை அறுவை சிகிச்சை கொண்டே சரிசெய்ய முடியும். இருப்பினும் சிலசமயங்களில் பெண்கள் சமையல் வேலை செய்யும் போது, சூடு பட்டு தழும்புகளைப் பெறுவார்கள். சூடான எண்ணெய் படுவது, குக்கரில் சூடு வைத்துக் கொள்வது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக்கொள்வது என சருமத்தில் தழும்பை பெறுவார்கள். சூட்டி காயத்தை வேகமாக ஆற வைக்கவும் தழும்பை மறைய வைக்கும் கவலையும் சேர்ந்து கொள்ளும். அந்த மாதிரியான தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம். ரசாயனங்கள் அல்லாத நம் வீட்டில் இருக்கும் பொருட்களால் தழும்புகளை மறைய வைக்க முடியும் எப்படி என பார்க்கலாம்.
தீக்காயத்திற்கு :
தீக்காயம் பட்டவுடன் உடனடியாக தேனை தடவினால் சருமத்தில் உண்டாகும் எரிச்சல் மறையும். விரைய்வில் காயம் ஆறும். ஐஸ் கட்டியை வைத்தாலும் பலன் உடனடியாக சரும சூடு தணிந்துவிடும். உப்பு நீரும் பலன் தரும்.
தழும்புகளுக்கு :
ஆறிய பின் உண்டான தழும்பிற்கு சிட்ரஸ் பழங்கள், தீக்காயத் நீக்க ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சிறந்தது. எலுமிச்சை சாற்றை தினமும், தழும்பு ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
பால்:
தினமும் குளிக்கும் முன்பு, தழும்புகள் உள்ள இடத்தில் பாலை தடவி, மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
பாதாம் எண்ணெய் :
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி, மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு, இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.
கற்றாழை :
கற்றாழையில் உள்ள ஜெல்லானது, மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.
தக்காளி :
தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும்.
சீமை சாமந்தி :
டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ப்ளேவரில் விற்கப்படும், டீயை போட்ட பின்பு, அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply