ஷாஹி துக்கடா

Loading...

பிரெட் ஸ்லைஸ் – 10,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
பால் – 1 லிட்டர்,
சர்க்கரை – 2 கப்,
குங்குமப்பூ – சிறிதளவு,
அலங்கரிக்க முந்திரி,
பிஸ்தா (பொடியாக நறுக்கியது).


எப்படிச் செய்வது?

ஓரங்களை நீக்கி, பிரெட் ஸ்லைஸ்களை சதுரமாகவோ, நீண்ட சதுரமாகவோ வெட்டிக் கொள்ளவும். பின் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும். பாலை மெல்லிய தீயில், கனமான பாத்திரத்தில் வைத்து நன்றாக சுண்ட வைத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டபின், குங்குமப்பூ சேர்க்கவும். பால் நன்றாகச் சுண்டி பாஸந்தி பதத்திற்கு வரும்போது கீழே இறக்கிவிடவும். பொரித்த பிெரட் துண்டுகளை ஒரு தட்டில் அழகாக அடுக்கி, அதன் மேல் சுண்டிய பாலைக் கொண்டு மூடிவிடவும். ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு ஊறியபின், பாதாம், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சில்லென்று பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply