விருச்சிக ராசியினருக்கு 2017 ஆங்கில புத்தாண்டு எப்படி

Loading...

விருச்சிக ராசி நேயர்களே!:

ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் இரண்டாமிடத்திற்கு வருவது அசையா சொத்துகளான பூமி வீடு போன்றவற்றினை வாங்கும் யோகத்தினை கொடுக்கும்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை அதிகமாக கொடுக்கும். ராகு ஒன்பதாமிடத்திற்கும் கேது மூன்றாமிடத்திற்கும் வருவது சிறப்பு.

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் தன வரவு மற்றும் செல்வச்சேர்க்கை அதிகமாக இருக்கும் செப்டம்பர் மாதம் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் புதிய தொழில்களில் முதலீடுகளும் செலவுகளும் அதிகரிக்கும்.

ஜனவரி – குல தெய்வ வழிபாடு:

ஆண்டின் துவக்கத்தில் இரண்டாமிடத்தில் இருக்கும் சூரியன் சரளமான பண புழக்கத்தைத் தருவார். இம்மாதம் 14ம் தேதி மூன்றாமிடத்திற்கு சூரியன் வருகிறார் அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உருவாகும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் குலதெய்வக் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். புதன் இம்மாதம் முழுவதும் இரண்டாம் இடத்தில் இருப்பது பேச்சினாலேயே எல்லா காரியத்தையும் சாத்தித்துக் கொள்வீர்கள் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பது அதிகமான லாபத்தை கொடுக்கும் சுக்கிரன் நான்காமிடத்திலிருப்பது வாகன யோகத்தை கொடுக்கும் இம்மாதம் 27ம் தேதி ஐந்தாமிடத்திற்கு மாறுகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் சனி வருட ஆரம்பத்தில் உங்கள் ஜென்ம ராசியில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி தேதி இரண்டாமிடத்திற்கு வருவது பண வரவை அதிகப்படுத்தும் ராகு பத்தாமிடத்தில் இருப்பது தொழில் உத்தியோகத்தை மேன்மையடையச் செய்யும் கேது நான்காமிடத்திலிருப்பது வீடு வாகனம் வாங்கும் நற்பலனைக் கொடுக்கும்.

பிப்ரவரி – வியாபாரம் சிறப்பு:

சூரியன் இம்மாதம் 13ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கலாம். புதன் இம்மாதம்03ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது வியாபாரம் சிறப்படையச் செய்யும் 22ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது படிப்பில் மேன்மை நிலையைத் தரும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் – லாபம் அதிகரிப்பு:

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வகையில் விருது பரிசு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் செவ்வாய் 02ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களால் தொல்லை உண்டாகும் புதன் 11ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது ஷேர்மார்க்கெட் முதலீடுகளில் லாபத்தைத் தரும் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் – தொழிலில் நன்மை:

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் தொழிலில் பிரச்சினைகள் உண்டாகலாம் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வாகனம் வாங்கி விற்கும் தொழில் செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே – இடமாற்றம்:

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் கூர்மையான கத்தி மற்றும் கண்ணாடிப் பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை இவற்றால் காயங்கள் உண்டாகலாம். சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் பிரச்சினை உண்டாகும். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் – கவனம் தேவை:

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவுக்கு விபத்து, காயம் உண்டாகலாம் புதன் இந்த மாதம் 03ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் நல்லுறவு உண்டாகும் 18ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தை கொடுக்கலாம். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை – பெண்களால் கஷ்டம்:

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உத்தியோக உயர்வுடன் பணியிட மாற்றம் உண்டாகும் செவ்வாய் 11ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரை சொத்துகளில் உங்களுக்கு பங்கு கிடைக்கும் புதன் இந்த மாதம் 03ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் அன்னிய தேச தொழில் தொடர்புகள் சிறப்படையும் 21ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் சுக்கிரன் 26ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் கஷ்டம் உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் – விருது கிடைக்கும்:

சூரியன் 17ம் தேதி உங்கள் பத்தாமிடத்திற்கு வருகிறார் மன லயிப்புடன் வேலை செய்வீர்கள் செவ்வாய் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு விருது கிடைக்கும். சுக்கிரன் 21ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பொதுவாக நல்ல பலன்களை அள்ளித் தருவார் கேது 18ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி பயணம் செல்லும் நிலை உண்டாகும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் – எண்ணம் நிறைவேறும்!:

சூரியன் 17ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு கிடைக்கும் செவ்வாய் 13ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் மனதில் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் புதன் 27ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் குரு 12ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வங்கியில் முதலீடுகளும் செலவுகளும் அதிகரிக்கும் சுக்கிரன் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் – செலவுகள் அதிகரிக்கும்:

சூரியன் 18ம் தேதி உங்கள் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பா வகையில் செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் 30ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு போன்றவைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் புதன் 30ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வெளிநாட்டு வியாபாரத் தொடர்புகள் சிறப்படையும். சுக்கிரன் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் – பதவி உயர்வு:

சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு கிடைக்கும் புதன் 02ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் 24ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபார லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் 03ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் 26ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில்சந்தோஷம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் – சம்பளம் அதிகரிக்கும்:

சூரியன் 16ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் சம்பளம் அதிகரிக்கும் சுக்கிரன் 20ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வீட்டுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply