ரிஷப ராசியினருக்கு 2017 ஆங்கில புத்தாண்டு எப்படி

Loading...

ரிஷப ராசிக்காரர்களே!

இந்த ஆண்டு துவக்கத்தில் சுபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குருவின் ராசி மாற்றமானது பொருளாதார வகையில் சிக்கலைக் கொடுக்கலாம். ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் சுபஸ்தானத்திற்கு வருவது தொழிலில் இருந்து வந்த தடை நீங்கி சிறப்படைய வைக்கும்.

இவ்வாண்டு ராகு கேது பெயர்ச்சி ஆகஸ்ட் மாதம் வரை ராகு நான்கில் இருப்பது வாகனம் வீடு ரிப்பேர் செய்து பராமரிக்கும் நிலை உண்டாகும் கேது பத்தில் இருப்பது தொழில் மாற்றத்தை கொடுக்கும். ஆகஸ்ட் மாதம் 18ம் தேதிக்கு மேல் ராகு சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும் கேது கும்பத்தில் இருந்து மகரத்திற்கும் இடம் பெயர்ச்சியடைகிறார். இதன் மூலம் ராகு மூன்றாம் இடத்திற்கும் கேது ஒன்பதாம் இடத்திற்கும் பெயர்ச்சியடைகின்றனர்.

ஜனவரி – பொருளாதார நிலை சிறப்பு

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் இது வரை தொழில் இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கிவிடும். செவ்வாய் 20ம் தேதி லாபஸ்தானத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் புதன் இம்மாதம் முழுவதும் எட்டாம் இடத்தில் இருப்பது ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்க வேண்டும் குரு 05ம் இடத்திலிருப்பது பொதுவாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் சுக்கிரன் பத்தாம் இடத்தில் இருப்பது தொழில் நிலை சிறப்பைத் தரும் 27ம் தேதி 11ம் இடத்திற்கு வருவது மனதில் எண்ணியவை எல்லாம் இனிய வகையில் நிறைவேறும். சனி 07ல் இருப்பது வியாபாரம் சிறப்படைய உதவும்.

பிப்ரவரி – குல தெய்வ வழிபாடு

பத்தாமிடத்திலிருக்கும் சூரியன் உத்தியோகத்தில் நல்ல நிலையை கொடுப்பார் 13ம் தேதி முதல் பத்தாமிடத்திற்கு வருவது பதவி உயர்வைத் தரும். செவ்வாய் இம்மாதம் முதல் 11ம் இடத்திலேயே இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவைத் தரும். புதன் 03ம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு போகும் நிலை உண்டாகும் 22ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருவது வியாபார விருத்தியை கொடுக்கும்

ஐந்தாம் இடத்திலிருந்து குரு பொருளாதார நிலையை சீராக வைத்திருக்க உதவுவார் சுக்கிரன் 11ல் இருப்பது மனதில் எண்ணியவை எல்லாம் இனிய வகையில் நிறைவேறும். சனி 08ல் இருப்பது தொழில் வியாபாரத்தில் மந்த நிலையைக் கொடுக்கும் ராகு 4ல் இருப்பதும் கேது 10ல் இருப்பது வாகனப் பராமரிப்பு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பைத் தரும்.

மார்ச் – வீடு நிலம் வாங்கலாம்

இது வரை உத்தியோகத்தில் ஏற்றம் தந்த சூரியன் 14ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவதால் சம்பள உயர்வை கொடுப்பார் செவ்வாய் 02ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது வீடு நிலம் வகையில் முதலீடுகளை செய்யும் நிலையைக் கொடுக்கும். புதன் 11ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் நினைப்பதற்கு மாறுபட்ட வகையில் செயல்கள் நடைபெறும் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது குடும்ப செலவுகளை அதிகப்படுத்துவார். குரு 5மிடத்திலிருந்து பண வரவைத் தருவார் சுக்கிரன் பனினொன்றாமிடத்திலிருந்து நல்ல லாபத்தை தருவார் சனி தொழிலில் இடையூறுகளைத் தருவார் ராகு 4ல் இருப்பதும் கேது 10ல் இருப்பது வாகனப் பராமரிப்பு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பைத் தரும்.

ஏப்ரல் – இடமாற்றம்

14ம் தேதி வரை தொழில் லாபத்தை 14ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது அரசு ஊழியர்களுக்கு இட மாற்றத்தை தருவார் செவ்வாய் 13ம் தேதி ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு உண்டாகும் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை எனவே கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

மே – உத்தியோக உயர்வு

சூரியன் இம்மாதம் 15ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் உத்தியோக சிறப்பைத் தருவார். செவ்வாய் 27ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது பண வரவைத் தரும் சுக்கிரன் 27ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவி வகையில் அதிக செலவுகளை கொடுப்பார் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை எனவே கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

ஜூன் – சம்பள உயர்வு

சூரியன் இம்மாதம் 15ம் தேதிக்கு இரண்டாம் இடத்திற்கு வருகிறார் சம்பள உயர்வு கிடைக்கும். புதன் 03ம் தேதி ஜென்ம ராசிக்கு வருவது சமயோசிதமாக செயல் பட்டு வெற்றியடையக் கூடிய தன்மையைத் தரும் 18ம் தேதி இரண்டாமிடற்கு வருவது வியாபாரத்தில் பண வரவை அதிகரிக்கச் செய்யும் குடும்ப சந்தோஷமும் அதிகரிக்கும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி சுக்கிரன் ஜென்மராசிக்கு வருவது மனதில் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை எனவே கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

ஜூலை – குடும்பத்தில் சந்தோஷம்

சூரியன் இம்மாதம் 17ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் செவ்வாய் இம்மாதம் 11ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் சகோதரவகையில் சச்சரவுகளை கொடுப்பார் புதன் 03ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் நீங்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த சுப மங்கல தகவல் வந்து சேரும் 21ம் தேதி நான்காமிடதிற்கு மாறுகிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை எனவே கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

ஆகஸ்ட் – மனக்குழப்பம் அதிகரிக்கும்

சூரியன் இம்மாதம் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு மனை கிடைக்கலாம் செவ்வாய் 27ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள் சுக்கிரன் 21ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அலைச்சல் அதிகரிக்கும் இம்மாதம் 18ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் மனக் குழப்பங்கள் அதிகரிக்கும் இம்மாதம் 18ம் தேதி கேது ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் புதன், குரு சனி ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

செப்டம்பர் – கவனம் தேவை

சூரியன் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலை தொடர்பான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் செவ்வாய் 13ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் பூர்வீக வீட்டை பாகம் பிரிக்கும் நிலை உண்டாகும் புதன் 27ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் நல்லுறவு உண்டாகும் குரு 12ம் தேதி ஆறாமிடத்திற்கு பெயர்ச்சியடைகிறார் பொருளாதர விஷயங்களில் கவனம் தேவை சுக்கிரன் 15ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

அக்டோபர் – கடன் வாங்கும் சூழ்நிலை

சூரியன் 16ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் கடுமையான நெருக்கடி ஏற்படும் செவ்வாய் 30ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களுடன் பிரச்சினை உண்டாகும் புதன் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்திற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும் சுக்கிரன் 15ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்லும் நிலை உண்டாகும் குரு,சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

நவம்பர் – வியாபாரம் விருத்தி

சூரியன் 17ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் அரசு அதிகாரிகளுடன் நல்லுறவு உண்டாகும் புதன் 02ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் வியாபாரம் விருத்தியாகும் 24ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை சுக்கிரன் 03ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் விலை உயர்ந்த ஆபரணங்களை யாருக்கும் இரவல் தர வேண்டாக்ம் 26ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும்

குரு,சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

டிசம்பர் – பெண்களால் கஷ்டம்

சூரியன் 16ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் அப்பாவுக்கு விபத்து கண்டம் உண்டாகலாம் சுக்கிரன் 20ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் பெண்களால் கஷ்டம் உண்டாகலாம் செவ்வாய், புதன், குரு,சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாத பலன்களையே தொடர்ந்து தருவார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply