பேசன் லட்டு

Loading...

கடலை மாவு – 1 கப்,
சர்க்கரை – 1 கப்,
நெய் – 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
அலங்கரிக்க பொடித்த பாதாம் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் கடலை மாவை போட்டு மிதமான தீயில் பச்சை வாசனை போகும்வரை பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் சலிக்கவும். நெய்யை நன்கு சூடு செய்து மாவில் ஊற்றவும். பின்பு இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். ெநய் சூடாக இருக்கும் போதே லட்டுகள் பிடித்து, மேலே பாதாமை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply