நாட்டுக் கோழி பொரியல்

Loading...


தேவையான பொருட்கள்

நாட்டுக் கோழி – 300 கிராம்
அரிசி மாவு – 3 மேஜைக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க
சிக்கனை பதப்படுத்த
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 துண்டு
தயிர் – 1 கப்
மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
நல்ல மிளகு தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 1
மேஜைக்கரண்டி


செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
சுத்தம் செய்த சிக்கனை எடுத்துக் கொள்ளவும்
இஞ்சி மற்றும் பூண்டை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்துக் கொள்ளவும்
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், நல்ல மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்
இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்
எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நன்கு கலக்கவும்
பின்பு அதனுடன் சிக்கன் சேர்க்கவும்
நன்கு கலக்கி 3 மணி நேரம் தனியே வைக்கவும்
பின்பு அதனை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்
ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
மூடி வைத்து சிறித நேரம் வேக வைக்கவும்
சிக்கன் வெந்து விட்டது
பின்பு அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
அதனுடன் அரிசி மாவு சேர்த்து நன்கு நன்கு கலக்கவும்
பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
அதில் சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும்
பின்பு அதனை எடுத்து வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறுடன் பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply