சிவப்பு கீரை மசியல்

Loading...


தேவையான பொருட்கள்

சிவப்பு கீரை- 2 கப் அளவு,
மிளகாய் வத்தல்-3,
புளி- சிறிதளவு,
உப்பு- தேவையான அளவு,
தக்காளி- 2,
பச்சை மிளகாய்- 4,
வெங்காயம்-1.

செய்முறை:-

* கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* புளியை கரைத்து, அந்த கரைசலை நன்றாக கொதிக்க விட வேண்டும். புளி கரைசலில் தேவையான உப்பு சேர்த்து, அதில் கீரையை கொட்டி வேக வைக்க வேண்டும்.
* தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக அரிந்து கொண்டு, கீரையுடன் சேர்த்து போட்டு கிளற வேண்டும்.
* பின்னர் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். சரியான பக்குவத்தில் வந்த பின்பு, கீரை மசியலை இறக்கி விடலாம்.
* சிவப்பு கீரை மசியல் ஒரு சத்தான உணவு ஆகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம். கீரை மசியலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply