சன்னா மசாலா

Loading...

வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் -1
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியாதூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
மஞ்சள் துள் – 1/4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
எண்ணெய் -3 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/4 ஸ்பூன்
பூண்டு – 3 பல்
கொத்தமல்லி – சிறிது


செய்முறை :

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் குக்கரில் மஞ்சள் தூள், உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய் தூள், மூன்று பல் பூண்டை பொடியாக நறுக்கி போட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும்.
கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் பச்சைமிளகாய்,அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும். வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு எல்லாம் சேர்ந்து வதங்கியதும் குக்கரில் வேக வைத்த கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு :

மசாலா திக்காக இருக்க 3 ஸ்பூன் வெந்த கொண்டைகடலை எடுத்து மிக்ஸ்யில் அரைத்து சேர்க்கவும்

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply