கற்பூரவல்லி சட்னி

Loading...


தேவையான பொருள்கள் :

கற்பூரவல்லி – 30
கருப்பு உளுந்து – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 4
தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி
புளி – கொட்டை பாக்கு அளவு
உப்பு – சுவைக்கு
பெருங்காயம் தூள் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை :

• வாணலியில் எண்ணெய் ஊற்றி புளி, உளுந்து, தேங்காய் துருவல், மிளகாய் வற்றலை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
• பின்னர் கற்பூரவல்லி இலையை போட்டு வதக்கி கொள்ளவும்.
• நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் அனைத்தையும் போட்டு அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
• இந்த சட்னிக்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
• சளி, இருமல், அஜீரணம், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply