உருளைக்கிழங்கு மசாலா இலங்கை சமையல்

Loading...


தேவையான பொருட்கள்:

250 கிராம் வெண்டிக்காய்
1/8 தே.க.மஞ்சள்தூள்
1 தே.க. உப்புத்தூள்
2 மே.க. தேங்காயெண்ணெய்
½ தே.க கடுகு
1 தே.க தீட்டின உழுத்தம்பருப்பு
5-6 கருவேப்பிலை, கிழித்துப் போடவும்.
½ தே.க. பொடியக்கிய கறுவா
4-5 பச்சைமிளகாய், குறுணலாக வெட்டவும்.
4 மே.க. குறுணலாக வெட்டிய வெங்காயம்.
½ தே.க. குறுணலாக வெட்டிய இஞ்சி
1 தே.க. பெருஞ்சீரகம், பொடியக்கவும்.


செய்முறை:

உருளைக்கிழங்கை மெதுமையாக அவித்து,உரித்து, சிறுகட்டிகள் இருக்குமாறு உலுத்தி, மஞ்சள்தூள், உப்பு என்பவற்றைப் போட்டுப் புரட்டிக் கொள்க.
ஒரு தாச்சியில் தேங்காய்எண்ணெயைக் காயவிட்டு, கடுகு, உழுத்தம் பருப்பு, கருவேப்பிலை என்பவற்றைத் தாளித்து, இதில் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பெருஞ்சீரகம், கறுவா என்பவற்றைப் போட்டு வாசனைவரச் சுருள வதக்கி, பிறகு புரட்டி வைத்த உருளைக்கிழங்கைப் போட்டு, நன்றாகச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதனை மசாலாத் தோசைக்கும், பற்றீஸ், போண்டா, அடைத்த குடமிளகாய், அடைத்த புடலங்காய் முதலியவற்றுக்கு உள்ளீடாக வைப்பதற்கும் பயன்படுத்தலாம். பூரி, சப்பாத்தி முதலிய ரொட்டிப் பக்குவங்களுடன் பரிமாறுவதற்கு, இப்பக்குவத்தில் ¼ சுண்டு தண்ணீரும் விட்டுக் கொதிக்கவிட்டு, சிறிது இளக்கமான பதத்தில் இறக்குதல் வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply