இந்த மாத்திரைகளை சாப்பிட்ட உடன் அடித்து போட்ட மாதிரி தூக்கம் வருதா இதுதான் காரணம்

Loading...

இன்றைய சூழலில் தூக்கம் வரவில்லை, பசிக்கவில்லை என சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் மாத்திரை சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.

இப்படி மாத்திரை எடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு சில மாத்திரைகளை சாப்பிட்டால் மட்டும் உடல் மிகுந்த சோர்வுடன் இருப்பது போல் தோன்றும்.

அப்படிப் பட்ட மாத்திரைகளையும், அது உங்களை சோர்வடையச் செய்வதற்கான காரணங்களையும் இங்கு காண்போம்.


அலர்ஜி மாத்திரைகள்

நுரையீரல் தொற்று அலர்ஜி மாத்திரைகள் சாப்பிடும் பொழுது அதில் உள்ள வேதிப் பொருள்கள் மூளையில் உள்ள நரம்பு மணடலத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், மயக்கநிலை ஏற்பட்டு தூக்கம் வருவது போன்ற சோர்வுநில்லையை ஏற்படுத்தி விடுகிறது.


ரத்த அழுத்த மாத்திரைகள்

அட்ரினலின் என்பது இதயத் துடிப்பை வேகப்படுத்தி ரத்த வேகத்தை அதிகப்படுத்துபவை. இதனால், உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொள்ளுவதால், அது அட்ரினலின் சுரப்பைக் குறைத்து சோர்வு உண்டாகச் செய்கிறது.


மன அழுத்த மாத்திரைகள்

இக்காலத்தில் மன அழுத்த மாத்திரைகளை உட்கொள்ளுபவர்கள் அதிகரித்துவிட்டனர். அதிலும், ஆண்களை விட பெண்களே அதிகளவு மன அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

மனது புத்துணர்ச்சியுடன் செயல்பட செரடோனின் ஹார்மோன் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் செரடோனின் ஹார்மோனை கட்டுபடுத்தி மெலடோனின் சுரப்பை அதிகபபப்டுத்தி விடுகிறது. இதனால், அளவுக்கு அதிகமாக மயக்க நிலை ஏற்பட்டு உடலை சோர்வடையச் செய்கிறது.


நரம்பு தளர்ச்சி மாத்திரைகள்

நரம்பு தளர்ச்சிக்காக உட்கொள்ளும் மாத்திரைகள் நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி உடலை பலவீனமாக்கிவிடுகிறது.

இதனால், தூக்கம் வருவது போன்று உடல் சோர்வு அடைந்து விடுகிறது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply