இதை இரவில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம் என்ன தெரியுமா

Loading...


தேவையான பொருட்கள்

தேங்காய் பால் – 2 கப்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
தேன் – 1 டீஸ்பூன்
இலவங்க பட்டை – பாதி டீஸ்பூன் அளவு
மிளகு – ஒரு சிட்டிகையளவு

செய்முறை

தேவையான அனைத்து பொருட்களையும் முதலில் கடாயில் இட்டு பத்து நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும். பின் அதில் இலவங்க பட்டை பொடியை தூவி ஃப்ரிட்ஜில் வைத்துக் குடித்து தினமும் குடித்து வரலாம்.
தேங்காய் பால் நிறைந்த இந்த பானத்தில், ஊட்டச்சத்துக்கள், மெக்னீசியம், விட்டமின் B, அமிலங்கள், போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
தேங்காய் பால் கலந்த பானத்தைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நமது உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றி, உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறது.
இதயம், கல்லீரம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சளித் தொல்லைகளை போக்கி, நமது உடம்பின் செரிமான மண்டலத்தை சீராக்கி, ரத்த சோகையை வராமல் தடுத்து, அதை எதிர்த்து போராடுகிறது.
நமது உடம்பில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
நமது உடம்பின் சுவாச மண்டலத்தை வலுப்படுத்தி, தூக்கமின்மை பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளை போக்கி, இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுகிறது.
தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply