போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Loading...

%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b7%e0%af%87-%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%aeபோர்ஷே நிறுவனம் வழங்கும் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன்…
ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் போர்ஷே நிறுவனம், தாங்கள் தயாரித்து வழங்கும் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவி என்ற ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளனர். இது முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இஞ்ஜின் திறன்;
போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவியின் பெட்ரோல் வேரியன்ட் 300 ஹெச்பியையும், டீசல் வேரியன்ட் 245 ஹெச்பியையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
தோற்றம்;
போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவியில் செய்யப்பட சிறு-சிறு மாற்றங்கள் தான், இதை மேலும் தனித்துவம் மிக்க மாடலாக மாற்றுகிறது. போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவியில், டைனமிக் பை-செனான் ஹெட்லேம்ப்கள், அகலமான வீல் ஆர்ச்கள் உடைய 20 இஞ்ச் ஆர்எஸ் ஸ்பைடர் வீல்கள் மற்றும் ‘பிளாட்டினம் எடிஷன்’ என்ற வார்த்தைகள் பதிக்கப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டோர் சில்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது.
இன்டீரியர்;
போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவியின் இன்டீரியரில், 7-இஞ்ச் டச்ஸ்கிரீன் உடைய புதிய தலைமுறை போர்ஷே இன்ஃபோடென்யின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த போர்ஷே இன்ஃபோடென்யின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது. நீங்கள் எல்லா விதமான டியூன்களையும் தெளிவாக கேட்க, போஸ் நிறுவனத்தின் 14-ஸ்பீக்கர் செட் டப் பொருத்தபட்டுள்ளது.
சீட்கள்;
போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவியின் சீட்கள், லெதர் கொண்டு உருவாக்கபட்டதாகும். அனைத்து ஹெட்ரெஸ்ட்களும் போர்ஷே கிரஸ்ட் கொண்டுள்ளது. மேலும், பானராமிக் சன் ரூஃப் வசதியும் உள்ளது.
கிடைக்கும் வண்ணங்கள்;
போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவி, நான்-மெட்டாலிக் பிளாக் அல்லது வைட், ஜெட் பிளாக் மெட்டாலிக், ரோடியம் சில்வர் மெட்டாலிக், மஹோகனி மெட்டாலிக் மற்றும் கரீரா மெட்டாலிக் என ஏராளமான நிறங்களில் கிடைக்கிறது. மேலும், இதன் எக்ஸ்டீரியர், பர்பூரைட் மெட்டாலிக் என்ற நிறத்திலும், தேர்வு முறையில் வழங்கப்படுகிறது.
போர்ஷே டைரக்டர் கருத்து;
போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவியின் அறிமுகத்தை ஒட்டி, போர்ஷே இந்தியா டைரக்டர் பவன் ஷெட்டி மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார். “போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவி, சிறந்த ஸ்டைல் உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கில், பிரத்யேக மேட்டீரியல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட 4-டோர்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இதன் உயர் தரமான ஸ்டாண்டர்ட் உபகரணங்கள், மற்றும் கண்ணை கவரும் விவரக்குறிப்புகளால், இது ஈர்க்கவைக்கும் மாடலாக உள்ளது” என பவன் ஷெட்டி தெரிவித்தார்.
விலை விவரங்கள்;
போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் (பெட்ரோல் வேரியன்ட்) – 1,06,68,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) ரூபாய் முதல் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் (டீசல் வேரியன்ட்) – 1,08,86,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) ரூபாய் முதல்
டெலிவரி;
இந்த போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிஷன் எஸ்யூவி-களின் டெலிவரி, இந்த ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply