பெண்களை தன் வசமாக்கிய மருதாணி

Loading...

%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b0மருதாணி ஒரு மருத்துவ மூலிகை செடி ,பெண்களுக்கு மிகவும் பிடித்தமான செடி, மேலும் பல நன்மைகள் நமக்கு தரும் செடி.

மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீக்கத்தை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தலாம். அதன் இலைகளை பேஸ்ட்டாக மாற்றி வீங்கிய பகுதியில் தடவி, அதனை காயவிட்டால் வீக்கம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும்.

இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்ட்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். மருதாணியின்
பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

மேலும் இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.மருதாணி செடியின் பட்டையை ஊற வைத்த சிறிதளவு நீரை காலை, மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

மருதாணி இலையை நன்றாக அரைத்து தலைவலிக்கு நெற்றியிலும், பொட்டுகளிலும் பற்றுப் போட்டுக்கொண்டால் தலைவலி உடனே நீங்கும். நகசுத்தி எனப்படும் நோய், விரல்களில் வராது தடுக்கும் தன்மையுடையது.

அனைத்து வகை தலைமுடி பிரச்னைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதாணி இலைகளை பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து, தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply