புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் ரகசியமாக உருவாக்கப்படும் திட்டம் படங்கள் வெளியாகியது

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9c%e0%ae%be-1000-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aaகவாஸாகி நிறுவனம் ரகசியமாக புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் உருவாக்கி வருவது குறித்த தகவல்கள், அந்நிறுவனத்தின் பேடன்ட் படங்களில் வெளியாகியுள்ளது. புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
புதிய கவாஸாகி நின்ஜா 1000..
புதிய கவாஸாகி நின்ஜா 1000, ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வரும் சூப்பர் பைக் ஆகும். புதிய கவாஸாகி நின்ஜா 1000 மூலம் கவாஸாகி நிறுவனம், உலகம் முழுவதும் ஸ்போர்ட் டூரிங் செக்மென்ட்டில் பிரவேசம் செய்ய உள்ளது.
போட்டி;
சமீபத்தில் தான், டுகாட்டி நிறுவனம் தங்களின் புதிய சூப்பர்ஸ்போர்ட் 939 மாடல், வேர்ல்ட் டுகாட்டி வீக்கில் அறிமுகம் செய்தது. புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக், ஸ்போர்ட்ஸ் செக்மென்ட்டில், நேரடியாக புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 939 மாடலுடன் போட்டி போட உள்ளது.
அறிமுகம்;
இது வரை, முன்பு குறிப்பிட்ட 2 மாடல்களும் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை.
தோற்றம்;
பேடன்ட் படங்களில் காணப்படுவதை பொருத்து பார்த்தால், புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக், ஏரோடைனமிக் தோற்றம் கொண்டுள்ளது.
இதர அம்சங்கள்;
புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக், நின்ஜா ஹெச்2 மற்றும் நின்ஜா ஹெச்3 மாடல்களில் காணப்படுவது போன்ற விங்லெட்கள் கொண்டுள்ளது.
ரைடிங் சொகுசு;
புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக், நேராக நிமிர்ந்த நிலையிலும், ஒய்யாரமாகவும் உள்ளது. இது நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.
ரகசியமாக உருவாக்கம்;
புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக், ரகசியமாக தயாரிக்கப்படுகிறது. தங்களுடைய எந்த தொழில்நுட்பங்கள் எதுவும் நகலாக்கப்படுவதை கவாஸாகி நிறுவனம் விரும்பவில்லை.
இஞ்ஜின்;
இஞ்ஜின் மற்றும் பவர் உள்ளிட்ட விஷயங்களை பொறுத்தவரை, புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக்கில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்க வேண்டாம். புதிய கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக்கை, யூரோ4 விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மட்டும் கவாஸாகி இஞ்ஜினியர்கள் ரீ-டியூன் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply