தானியங்கி கார்களை தொடர்ந்து தானியங்கி பைக் பம்பார்டியர் தயாரிக்கிறது

Loading...

%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8dகாலையில் காரை எடுத்துக் கொண்டு ஆபிஸ் சென்று சேர்வதற்குள் பாதி திராணி போய் விடுகிறது. போக்குவரத்து நெரிசலால் காலை உற்சாகம் போய் உடலும், மனதும் சோர்வாகிவிடுகிறது. எனவே, கார் இருந்தாலும் பைக்கில் செல்வதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். சற்று விரைவாகவும், எளிதாகவும் சென்றுவிடலாம் என்பதே காரணம்.
ஆனால், பைக்கையும் போக்குவரத்து நெரிசலில் ஓட்டி சென்று சேர்வதற்குள் சோர்வு ஏற்படுவதுடன், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே ஓட்டும் அளவுக்கும்தான் நிலை இருக்கிறது. இந்த இரண்டு குறைகளையும் போக்கும் விதத்தில் தானியங்கி பைக் மாடல் ஒன்றை விமான தயாரிப்பில் புகழ்பெற்ற பம்பார்டியர் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.


பம்பார்டியர் ஆர்வம்

பம்பார்டியர் விமான நிறுவனத்தின் உரிமையாளரும், அந்நிறுவனத்தின் பிரபல டிசைனருமான சார்லஸ் பம்பார்டியர்தான் இந்த பைக் கான்செப்ட்டிற்கு பின்புலமாக இருக்கிறார். இந்த பைக் கான்செப்ட்டை ஆசிஷ் துல்கர் என்ற டிசைனருடன் இணைந்து உருவாக்கியிருக்கிரார் சாரலஸ் பம்பார்டியர்.


கான்செப்ட்

லிட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி1 என்ற செல்ஃப் பேலன்சிங் பைக் குறித்து நாம் ஏற்கனவை செய்தி வழங்கியிருக்கிறோம். இந்த சி1 பைக் மாடலின் அடிப்படையில்தான் இந்த தானியங்கி பைக் கான்செப்ட்டை உருவாக்கியிருக்கின்றனர்.


குளுகுளு பைக்

சாதாரண பைக்குகள் போல அல்லாமல், கார் போன்று முழுவதுமாக மூடப்பட்ட அமைப்புடையது. வெயில், மழை, குளிர் என அனைத்து சீதோஷ்ண நிலையிலும் சிறப்பாக செல்ல முடியும். குளிர்சாதன வசதியும் கொண்டது. இந்த பைக் குறித்து டிரைவ்ஸ்பார்க் வாசகர்களும் ஆர்வமும், வரவேற்பும் தெரிவித்திருந்தனர்.


மாடல் விபரம்

தங்களது தானியங்கி பைக் மாடலுக்கு சைக்ளோட்ரான் என்று பெயரிட்டிருக்கின்றனர். இதனை வர்த்தக ரீதியில் வெற்றி பெற வைப்பதற்கான முயற்சிகளில் அவர்கள் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றனர்.


இருக்கை வசதி

இந்த தானியங்கி எதிரெதிர் திசையில் இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் இருக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது கார் போன்று அமர்ந்து செல்லும் உணர்வை தருவதுடன், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.


சமநிலைப்படுத்தி நுட்பம்

இந்த இரண்டு சக்கர வாகனம் நிற்கும்போதும், வளைவுகளில் திரும்பும்போதும் சமநிலை தவறி கவிழாமல் செல்லும் வகையில், சுய சமநிலைப்படுத்தி தொழில்நுட்பத்தில் செல்லும்.


எலக்ட்ரிக் வாகனம்

இந்த பைக் பேட்டரியில் இயங்கும் என்பதால் சுற்றுப்புற சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தாது. மின்மோட்டார்கள் மூலமாக இரண்டு சக்கரங்களுக்கும் பவர் செலுத்தப்படும். நகர்ப்புறத்திற்கு மிக ஏற்றதாக இருக்கும்.


வரவேற்பு

போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கி நிற்கும் நகர்ப்புறங்களுக்கு இந்த பைக் மிக ஏற்றதாக இருக்கும். விலை அதிகமாக இருந்தால்கூட டாக்சி நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply