டெல்லியில் முதல் முப்பரிமாண வேகத்தடை பலன் தருமா

Loading...

%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bfசாலை சந்திப்புகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட விபத்து அபாயம் உள்ள இடங்களில் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த வேகத்தடைகளால் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுவதோடு, சமயத்தில் விபத்துக்களுக்கும் வழிகோழிவிடுகிறது. அதிவேகத்தில் வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல், கட்டுப்பாட்டை இழக்கும் அபாயமுமும். கட்டுமான செலவுகளும் இருக்கிறது. இந்த பிரச்னைகளை போக்கும் விதத்தில், வேகத்தடை போன்று காட்சியளிக்கும் முப்பரிமாண வர்ணப்பூச்சுகளை சாலையில் வரைந்திட முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் தெரிவித்தார். அதன்படி, டெல்லியில் முதல் முப்பரிமாண வேகத்தடை சாலையில் வரையப்பட்டிருக்கிறது.
இடம்…
டெல்லியில் உள்ள ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள சாலையில் டெல்லியின் முதல் முப்பரிமாண வேகத்தடை அமைக்கப்பட்டிருக்கிறது.
தோற்றம்
அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இது நிஜ வேகத்தடை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, வேகத்தை குறைக்க வழி செய்திடும் என நம்பப்படுகிறது.
பலன்
இந்த வேகத்தடையை கண்டு அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்ததாக தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் இயல்பான வேகத்தில் அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். ஆனால், புதிதாக வருபவர்களுக்கு இது எச்சரிக்கையை கொடுக்கும்.
எச்சரிக்கை
அதேநேரத்தில், அந்த இடத்தில் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்ற உணர்வை இந்த முப்பரிமாண வேகத்தடைகள் ஏற்படுத்தும். மேலும், வேகத்தடைகளில் ஏறி, இறங்கும்போது ஏற்படும் அலுங்கல் குலுங்கல்களையும் தவிர்க்கலாம்.
தீவிரம்…
நம் நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் இறக்கும் நிலையில், விபத்து நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து, அந்த இடங்களில் முப்பரிமாண வேகத்தடை ஓவியங்களை சாலையில் வரைந்திட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
புதிதல்ல…
இதுபோன்ற, 3டி ஸ்பீடு பிரேக்கர் எனப்படும் முப்பரிமாண வேகத்தடைகள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பிலெடெல்பியா நகரில்தான் முதல்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பின்னர், சீனா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த 3டி வேகத்தடைகள் உருவாக்கப்பட்டன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply