டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 ப்ரீ-புக்கிங் துவங்கியது

Loading...

%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9fடுகாட்டி நிறுவனம், இந்தியாவில் தங்களின் ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்களின் ப்ரீ-புக்கிங்கை துவங்கியுள்ளது. இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வழங்குவதில் புகழ் பெற்றுள்ளது.
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்கள் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.


புக்கிங்;

டுகாட்டி நிறுவனம் தயாரிக்கும் ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் காரணமாக, ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிளின் ப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.


புக்கிங் கட்டணம்;

டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிளின் ப்ரீ-புக்கிங், 2 லட்சம் ரூபாய் என்ற டோக்கன் கட்டணத்துடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


அறிமுகத்திற்கான காரணம்;

டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான முக்கியமான காரணமே, இவற்றின் இஞ்ஜின்கள் தற்போது யூரோ 4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமாக உள்ளது.
முன்னதாக, இந்த 2 மாடல்களுமே யூரோ 3 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமான 821சிசி இஞ்ஜின்கள் கொண்டிருந்தன.


கிடைக்கும் வண்ணங்கள்;

டுகாட்டி ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள், ஸ்டார் வைத் சில்க் மற்றும் டுகாட்டி ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.
டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மோட்டார்சைக்கிள், டுகாட்டி ரெட் நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.


இஞ்ஜின்;

டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்களுக்கு, டுகாட்டியின் 937 சிசி, எல்-ட்வின் லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 112 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 98 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
இவற்றில் பொருத்தபட்டுள்ள புதிய எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம், இந்த 2 மோட்டார்சைக்கிள்களையும் யூரோ 4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமானதாக மாற்றியுள்ளது.


மோட்கள்;

டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்கள், ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என 3 டிரைவிங் மோட்களுடன் கிடைக்கிறது.
மேலும், இந்த 2 மோட்டார்சைக்கிள்களிலும் ரைட் பை திராட்டில் என்ற புதிய அம்சம் சேர்க்க்கபட்டுள்ளது.


டயர்கள்;

டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மோட்டார்சைக்கிளுக்கு, பிரெல்லி ஸ்கார்பியன் ட்ரெயில் 2 டயர்கள் பொருத்தபட்டுள்ளது.
டுகாட்டி ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிளுக்கு, கூடுதல் டிராக்ஷன் மற்றும் ரைட் கண்ட்ரோல் அளிக்கும் பிரெல்லி டையாப்லோ ராஸ்ஸோ 2 டயர்கள் பொருத்தபட்டுள்ளது.


விலை;

டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ராடா 939 மற்றும் ஹைப்பர்மோட்டோராட் 939 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இவை தற்போது விற்பனையில் உள்ள மாடல்களை காட்டிலும் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply